Tuesday, January 24, 2012

காத்திருப்புக்கள்

காத்திருப்புக்கள்

உனக்கான
காத்திருப்பில்
உருவாகாத
உனது தேநீரும்
உறிஞ்சப்பட்டிக்கொண்டிருக்கும்
எனது தேநீரும்
உள்ளுக்குள்ளேயே
ஓடும்
வார்தைகளும்
அடங்கும்.

எதைச் சொல்ல?


எதைச் சொல்ல?


எதைச்சொல்ல நினைத்தாய் 


ஏன் எதையும் சொல்லாமலேயே இருந்தாய் 


கடைசிச் சந்திப்பின் மௌனமா


முற்றுப்பெற்றுக் கொண்டிருந்தொரு நட்பின் 


முடிவுரையா


நீ


விட்டுச்சென்ற குறிப்பேடு


விரிக்கப்படாமலேயே கிடக்கிறது


சொல்லாமல்


விட்டுச்சென்ற வார்த்தைகள்


விழுந்துவிடலாமென்ற பயத்தோடு.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் : ஆய்வில் தகவல்


Tender Coconutகர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர்

உடல் எடை குறையனுமா? மனசால நினைக்கனுங்க….!


Weight Loss Tipsமாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

மனசால நினைக்கனும்

நம்முடைய உடல் எடையை குறைக்கவேண்டுமெனில் உளரீதியாக நினைக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்பொழுதுதான் நாவை கட்டுப்படுத்தமுடியும். அதை விடுத்து கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.

Monday, January 23, 2012

ஈமெயில் அழியப் போகிறதா?


புறா.. கடிதம்.. மொபைல்.. மின்னஞ்சல்... அடுத்து?

மின்னஞ்சல் (Electronic Mail (a) Email) என்பது நமது தின வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மற்றவர்களுடன் வேகமாக தொடர்பு கொள்ள செலவில்லாத ஒரு தகவல் பரிமாற்ற சாதனமாக விளங்குகிறது.

Email

துவக்கத்தில் மின்னஞ்சல் என்றால் அனைவருக்கும் தெரிந்தது ஹாட்மெயில் தான். முதலில்

Friday, January 6, 2012

எத்தனை 'சி' பையில் இருந்தாலும் மன அமைதிக்கு இந்த 'சி' முக்கியம்!


Orange

ஓடியாடி அலையும் உடலுக்கு சத்தான உணவுகள் அவசியம். அந்த உணவுகளில் இயற்கையாகவே எண்ணற்ற உயிர்சத்துக்களும், தாதுப்பொருட்களும் அடங்கியுள்ளன. உடலின் வளர்ச்சிக்கும், நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் உயிர்ச்சத்துக்கள் எனப்படும் வைட்டமின்கள் அவசியம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில்...

Thursday, September 8, 2011

நம் காதல்...

நான்  கை  குலுக்கி

வாழ்த்து  சொன்னபோது

களங்கப்பட்டுப்போய்

இருக்குமோ? 

© ம. ரமேஷ் கவிதைகள்
-----------------------------

நான் கை குலுக்கி
வாழ்த்து சொன்னபோது
களங்கப்பட்டுப்போய்

இருக்குமோ?
நம் காதல்.
 
© ம. ரமேஷ் கவிதைகள்
---------------------------------------
நண்பர்களாக

இருப்போம் என்கிறாய்!

என்னால்

முடியவில்லை.

இன்றும் -

காதலோடுதான்
பேசிப் பழகுகிறேன்.

© ம. ரமேஷ் கவிதைகள் 
-------------------------------------------

காதலுக்குக் கண்ணில்லை! கண்ணீர் உண்டு!!*
--------------------------------------------------

நீ   என்னை

நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல

இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்

© ம. ரமேஷ் கவிதைகள் 
-------------------------------