கடலில் எண்ணெய்க் கசிவை அகற்ற அமெரிக்கர்களுக்கு யோசனைக் கூறிய தமிழ் விஞ்ஞானி சேஷாத்ரி ராம்குமார்: கடலில் உள்ள எண்ணெய்க் கசிவை அகற்ற மூன்று அடுக்குகளால் ஆன பைபர்டெக்கை கண்டுபிடித்துள்ளேன். பைபர்டெக் என்பது நெய்யப்படாத துணி, சுருக்கமாக, பஞ்சால் செய்த சாண்ட்விட்ச் என்று சொல்லலாம். கீழே ஒரு அடுக்குப் பஞ்சு, நடுவில் கார்பன், மேலே மீண்டும் ஒரு அடுக்குப் பஞ்சு இது தான் அமைப்பு.தற்போது கடற்கரையையும், கடலின் மேல் பரப்பில் படர்ந்துள்ள எண்ணெயையும் சுத்தப்படுத்துபவர்கள் கைக்கு உறையும், காலுக்கு நீண்ட கம்பூட்சும் அணிந்து சுத்தப்படுத்துவது பாதுகாப்பானதல்ல. காரணம் கடலில் படர்ந்துள்ள எண்ணெய்க் கசிவிலிருந்து நச்சு வாயுக்கள் வெளிப்படும். இது போன்ற சமயங்களில் பைபர்டெக்கை பயன்படுத்தினால், தன் எடையைப் போல் 40 மடங்கு எண்ணெயை அது உறிஞ்சிக் கொள்ளக் கூடியது. அதன் நடுவில் உள்ள கார்பன் நச்சு வாயுக்களை உள்வாங்கிக் கொள்ளும். எனவே, எண்ணெய், அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயு இரண்டையும் அகற்றி விடலாம். அது மட்டுமல்ல, இந்த துணியைப் பிழிந்து நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தலாம்.எண்ணெயை சுத்தப்படுத்துவதில் தற்போது பயன்பாட்டில் உள்ள, "பூம்' பஞ்சு உறிஞ்சுவதில் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயைத் தான் உறிஞ்சும். அதுவும் தவிர அது செயற்கை இழைகளால் ஆனது. அதைப் பயன்படுத்திய பின் நிலத்தில் புதைப்பதால், அது எளிதில் மக்காது. ஆனால், பஞ்சு இயற்கையாகவே மக்கும் தன்மை கொண்டது; அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை.இந்தியா போன்ற நாடுகளில், "பைபர்டெக்கிற்கு' பயன்பாடு அதிகம் உள் ளது. ராணுவத்தில் பல விஷயங்களுக்கு, உதாரணமாக, நச்சு வாயுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் மாஸ்க் செய்ய பயன்படுத்தலாம்.
Wednesday, July 28, 2010
எண்ணெய் கசிவை அகற்ற புதிய கண்டுபிடிப்பு :
கடலில் எண்ணெய்க் கசிவை அகற்ற அமெரிக்கர்களுக்கு யோசனைக் கூறிய தமிழ் விஞ்ஞானி சேஷாத்ரி ராம்குமார்: கடலில் உள்ள எண்ணெய்க் கசிவை அகற்ற மூன்று அடுக்குகளால் ஆன பைபர்டெக்கை கண்டுபிடித்துள்ளேன். பைபர்டெக் என்பது நெய்யப்படாத துணி, சுருக்கமாக, பஞ்சால் செய்த சாண்ட்விட்ச் என்று சொல்லலாம். கீழே ஒரு அடுக்குப் பஞ்சு, நடுவில் கார்பன், மேலே மீண்டும் ஒரு அடுக்குப் பஞ்சு இது தான் அமைப்பு.தற்போது கடற்கரையையும், கடலின் மேல் பரப்பில் படர்ந்துள்ள எண்ணெயையும் சுத்தப்படுத்துபவர்கள் கைக்கு உறையும், காலுக்கு நீண்ட கம்பூட்சும் அணிந்து சுத்தப்படுத்துவது பாதுகாப்பானதல்ல. காரணம் கடலில் படர்ந்துள்ள எண்ணெய்க் கசிவிலிருந்து நச்சு வாயுக்கள் வெளிப்படும். இது போன்ற சமயங்களில் பைபர்டெக்கை பயன்படுத்தினால், தன் எடையைப் போல் 40 மடங்கு எண்ணெயை அது உறிஞ்சிக் கொள்ளக் கூடியது. அதன் நடுவில் உள்ள கார்பன் நச்சு வாயுக்களை உள்வாங்கிக் கொள்ளும். எனவே, எண்ணெய், அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயு இரண்டையும் அகற்றி விடலாம். அது மட்டுமல்ல, இந்த துணியைப் பிழிந்து நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தலாம்.எண்ணெயை சுத்தப்படுத்துவதில் தற்போது பயன்பாட்டில் உள்ள, "பூம்' பஞ்சு உறிஞ்சுவதில் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயைத் தான் உறிஞ்சும். அதுவும் தவிர அது செயற்கை இழைகளால் ஆனது. அதைப் பயன்படுத்திய பின் நிலத்தில் புதைப்பதால், அது எளிதில் மக்காது. ஆனால், பஞ்சு இயற்கையாகவே மக்கும் தன்மை கொண்டது; அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை.இந்தியா போன்ற நாடுகளில், "பைபர்டெக்கிற்கு' பயன்பாடு அதிகம் உள் ளது. ராணுவத்தில் பல விஷயங்களுக்கு, உதாரணமாக, நச்சு வாயுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் மாஸ்க் செய்ய பயன்படுத்தலாம்.
Tuesday, July 27, 2010
அவள் நினைவுகளின் மிச்சங்கள் !!!
தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் !
அவசர வாழ்க்கையினூடே
எப்பொழுதோ தொலைந்துப்போன
புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன !
பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.!
அழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!
ஒருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!
மாணவர்கள் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல
சென்னை : ""மாணவர்கள் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல,'' என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சமுதாய விழிப்புணர்வு அமைப்பான, சுடர் வம்சத்தின் 5ம் ஆண்டு விழா சென்னை எழும்பூர், "இக்சா' மையத்தில் நேற்று நடந்தது. இந்த அமைப்பு, கடந்த 5 ஆண்டுகளாக சமுதாய மற்றும் தனி மனித வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.மாணவர்களிடம் நாட்டுப்பற்று, மனிதநேய உணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பேசியதாவது:கடந்த 5 ஆண்டுகள் சமுதாய விழிப்புணர்வு பணியில், மற்ற அமைப்புகளிலிருந்து மாறுபட்டு சிறப்பாக "சுடர்வம்சம்' செயல்படுகிறது. கல்வி தான் மாணவர்களின் சொத்து. பொருளாதார ரீதியில் மாணவர்கள் பின்தங்கியிருந்தாலும், லட்சியங்களை அடைவதில் பின் தங்கிவிடக் கூடாது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடை கிடையாது. கல்வி இல்லையென்றால் தாய், தந்தை கூட மதிக்க மாட்டார்கள்.இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.மாணவ, மாணவியர் 71 பேருக்கு "சுடர்வம்சம்' சார்பில் கல்வி ஊக்கத் தொகைக்கான காசோலை மற்றும் புத்தகங்களை கல்வியாளர் ரமேஷ் பிரபா வழங்கினார்.கல்வியாளர் ரமேஷ் பிரபா, கவிஞர் பிறைசூடன் மற்றும் காவல் துறை முன்னாள் உதவி ஆணையர் பிரபாகர் ஆகியோருக்கு சுடர்வம்சம் சார்பில், தொழிலதிபர் சீனா தானா விருதுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், சுடர்வம்சம் அமைப்பின் நிறுவனர் ரகுராஜ், ஆலோசகர் சந்திரன் சாமி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
குழந்தைகளே நேரத்தை மதியுங்கள்
குழந்தைகளா.. உங்களது பெற்றோர் தினமும் படியுங்கள் படியுங்கள் என்று புத்திமதி கூறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அது உங்களுக்குப் பிடிக்காத புத்திமதியாக இருக்கும்.
அவர்கள் உங்களை படியுங்கள் என்று கூறுவதற்கு முக்கியக் காரணம், இப்போதுதான் நீங்கள் படிப்பதற்கான நேரம். இந்த நேரத்தை வீணடித்துவிட்டால் பிறகு நீங்கள் படிக்க நினைத்தாலும் படிக்க முடியாது. இதனை உணர்ந்துதான் உங்களது பெற்றோர் உங்களுக்கு புத்திமதி கூறு
காந்தியின் பொன்னான வாக்குகள்
மகாத்மா காந்தியின் பொன்னான வாக்குகளை பின்பற்றி அதன்படி நடப்போம்.

சுதந்திரத்தை நாடும் மனிதன் மற்றவர்களை அடிமைப்படுத்துவது பற்றி எண்ணக் கூடாது.
சீர்திருத்தவாதியின் பாதை ரோஜா மலர்கள் தூவப்பட்டதல்ல.
எதிரியை அன்பினால் மட்டுமே வெற்றி கொள்.
உழைப்பின்றி உண்பவர்களை திருடர்கள் என்றுதான் கூற வேண்டும்.
வதந்திகளை பரப்பும் மனிதன் தன்க்கும் சமுதாயத்திற்கும் பெருங்கேட்டினை உண்டாக்குகிறான்.
காலம் உறுதியான நண்பனாகவும் இருக்கிறது. அதே சமயம் கருணையற்ற பகைவனாகவும் இருக்கிறது.
தார்மீக விளைவுகளை ஒழுக்கமான கட்டுப்பாட்டால்தான் ஏற்படுத்த முடியும்.
அணுக்கள் இடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான் இந்த உலகமானது பொடிப்பொடியாக உதிர்ந்து விழாமல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அதுபோலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும் இணைக்கும் சக்தி இருக்க வேண்டும்.
அன்பு உள்ள இடத்திலேயே உயிர் இருக்கிறது.
பகைமை அழிவைத் தருகிறது.
மனித சக்தி இன்னும் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் இணைக்கும் சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விட பெரியது.
வாழ்க்கைக்குரிய வழிகாட்டிகள்
நமது முன்னோர்களில் பலர் வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து அதன் நெளிவு சுளிவுகளை பொன்மொழிகளாக நமக்கு கூறியுள்ளனர். அவற்றைப் படித்து அதனைப் பின்பற்ற முயலுவோம்.
பழகிய மனைவி, பழகிய நாய், தயாராக இருக்கும் பணம் ஆகியவைதான் நம்பிக்கைக்குரிய நண்பர்கள். ஒரு முட்டாளின் இதயம் அவன் வாயிலிருந்து வருகிறது. ஒரு புத்திசாலியின் வாய் அவன் இதயத்திலிருந்து வருகிறது.
- பெஞ்சமின் பிராங்க்ளின்
பைத்தியத்தன்மை கலக்காத மேதை உலகத்தில் யாரும் இல்லை. உங்கள் லட்சியங்களை தைரியமாக வெளியிடுங்கள். யார் என்ன நினைப்பார்களோ என்று அஞ்சாதீர்கள். உங்கள் லட்சியத்தைப் பார்த்து உலகம் உங்களை `பைத்தியக்காரன்' என்று கூறும். கூறட்டும்! உண்மையில், நீங்கள் மேதை!! மனிதனின் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உண்டாகின்றன. யோசித்த பிறகு நாவை அசையுங்கள்.
- அரிஸ்டாட்டில்
பகுத்தறிவு என்பது உண்மையை அறிய கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். நம் அனைவரையும் ஒன்றாக இணைக்கத் தக்கதும் அதுவே; ஆனால் நாம் அதைத்தான் நம்புவதில்லை. வாழ்க்கை ஒரு கேளிக்கைக் கூடம் என்பது எவ்வளவு பொய்யானதோ, அவ்வளவு பொய்யானதுதான் வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்ற எண்ணமும் ஆகும். வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே.
-டால்ஸ்டாய்
இன்பத்துக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது பிறரும் இன்பம் அனுபவிக்கும்படி நடந்து கொள்வதே. பிறருக்குத் துன்பம் செய்து உன்னால் இன்பம் அனுபவிக்க முடியாது. கருத்து வேறுபாடுகளை நாகரீகத்துடன் ஏற்றுக் கொள்வதும், அவற்றை அழுத்தமாக எதிராளிகள் சுட்டிக் காட்டும்போது ரசிப்பதும், மன வளர்ச்சியின் உன்னதமான அடையாளமாகும். உண்மைதான் மூளையின் எல்லைக்கோடு.
- இங்கர்சால்
செல்வத்தினால் வரும் புகழ் நிலைப்பதில்லை. சாதனையினால் வரும் புகழுக்கு எதுவும் ஈடாகாது. அனைவரிடமும் முறையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு உதவி செய்யும் நிலையில் இருப்பவர்களிடம் மட்டும் முறையிடுங்கள். நாம் எதை இழந்து விட் டாலும் கவுரவத்தை மட்டும் இழக்க இடம் தரக்கூடாது. மனத்திருப்தி நமக்கு இயற்கையாக கிடைத்த செல்வம். ஆடம்பரம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம்.
- சாக்ரடீஸ்
வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் உண்மையைப் பார்க்க நாம் முயல வேண்டும். நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி. கவலை வாழ்க்கையின் எதிரி. சுயநலம், பேராசை, கோழைத்தனம் முதலானவைதான் நம் சுதந்திரத்தை இழக்கச் செய்யும் ஜென்மசத்ருக்கன். ஒரு மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு. ஆனால் அந்த மனிதனை வெறுக்காதே.
- ஷேக்ஸ்பியர்
சாதனைகளைப் படைப்பதற்கான வழி
குழந்தைகளா ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தாம் கொண்ட லட்சியத்தை அடைய அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து, அதில் தோல்வி கண்டாலும் துவண்டுவிடக் கூடாது. முயற்சியேச் செய்யாமல் இருப்பதை விட, முயற்சி செய்து தோல்வி அடைவது எவ்வளவோ மேல் என்பதை உணருங்கள்.
வாழ்க்கையில் அதுபோன்று ஒரு லட்சியத்தைக் கொண்டு வாழ வேண்டும் என சுவாமி விவேகானந்தர் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதாவது, வாழ்க்கையில் உயரிய லட்சியங்கைளக் கொள்ள வேண்டும். அதை அடைவதற்கு எப்போதும் சிந்தனை செய்ய வேண்டும். கனவிலும், செயலிலும், அதுவே உயிர்ப்புடன் இருக்க வேண்டும். உனது மூளை, தசை, நரம்பு, ஒவ்வொன்றும், அதை நிறைவேற்றும் வேகத்துடன் செயல்பட வேண்டும்.
உன்னுடைய நோக்கம் அது மட்டுமே மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு.
ஒரு முகமாக குவிந்த செயல் முனைப்பு, சக்தியையெல்லாம் ஒடுக்கி ஒரு சேர சேர்க்கும். ஆற்றல் ஆகியவைதான் லட்சியங்களை அடைவதற்கு அடிப்படையாகும். கடவுள், மிருகங்களைக் கூட மனிதனை போலவே படைத்திருக்கிறார். ஆனால் மிருகங்களுக்கு இந்த சிந்தனை தன்மையும், செயல் வேகமும் கிடையாது.
வெறும் வலிமை மட்டுமே பெற்றுள்ளதுதான் விலங்கினம்.
அதனால்தான் மிகவும் வலிமை வாய்ந்த மிருகத்தையும் கூட மனிதன் அடக்கியாள முடிகிறது. ஒரு சிறந்த மனிதனையும், சாதாரண மனிதனையும் பிரிப்பது கூட சிந்தனை ஆற்றல்தான். மேலும் அவர்களுடைய சிந்தனையில் இருந்த கருத்தூன்றும் சக்திதான். இந்த சக்தியை வீணாக்கக் கூடாது. இந்த சக்தியை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு தியானத்தில் ஈடுபடுங்கள்.
தியானம் செய்வதன் மூலம் நீங்கள் சிந்திப்பதை செயல்படுத்தும் துணிவும் மனவலிமையும் உங்களுக்கு கிடைக்கும். இது உங்கள் லட்சியங்களில் வெற்றி பெற உதவும் என்று இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்
Subscribe to:
Posts (Atom)




