வரலாற்றில் இன்று #இராமநாதபுரம் பிறந்தநாள்
Happy Birthday #Ramanathapuram
1910 ஆம் ஆண்டில் இதேநாளில் தான் மதுரை - திருநெல்வேலி மாவட்டங்களின் சிலபகுதிகளை ஒன்றினைத்து இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது
இம்மாவட்டத்தின் தலைநகராக மதுரையே இருந்தது பின்பு நிர்வாக வசதிக்காக 1985 ஆம் ஆண்டு தலைநகர் இராமநாதபுரத்திர்க்கு மாற்றப்பட்டு சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன
இம்மாவட்டத்தில் உள்ள #வட்டங்கள்
இராமநாதபுரம் ,பரமக்குடி, முதுகுளத்தூர் ,கடலாடி,கமுதி இராமேஸ்வரம் ,திருவாடானை
கீழக்கரை ,ராஜசிங்கமங்களம் என 09 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
#நகராட்சிகள்
இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி
பரமக்குடி (முதல் நிலை நகராட்சி)
இராமேஸ்வரம் (இரண்டாம் நிலை நகராட்சி )
கீழக்கரை மூன்றாம் நிலை நகராட்சி என நான்கு நகராட்சிகள் உள்ளன
#பேரூராட்சிகள்
முதுகுளத்தூர் , கமுதி, சாயல்குடி ,மண்டபம் ,தொண்டி, ஆர்.எஸ்.மங்களம், அபிராமம்
#ஊராட்சிகள்
இராமநாதபுரம் மாவட்டம் 429 ஊராட்சிகளை கொண்டுள்ளது
#ஒன்றியங்கள்
முதுகுளத்தூர், போகலூர், திருப்புல்லாணி, மண்டபம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம், பரமக்குடி, கடலாடி , நயினார் கோவில்
#கல்வி மாவட்டங்கள்
* இராமநாதபுரம்
* பரமக்குடி
* மண்டபம்
#வருவாய் மாவட்டங்கள்
இராமநாதபுரம் பரமக்குடி
#சுற்றுலா ஸ்தலங்கள்
இராமநாதபுரம் அரன்மனை , தனுஷ்கோடி, பாம்பன் பாலம், தேவிபட்டினம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி தர்ஹா, திருப்புல்லாணி, சேதுக்கரை, அப்துல்கலாம் நினைவிடம், ஓரியூர் சர்ச், வாலிநோக்கம் கடற்கரை, அரியமான் பீச், காரங்காடு சூழல் சுற்றுலா, மரபனு பூங்கா, பாம்பன் குந்துக்கால் மண்டபம், மன்னார் வளைகுடா தீவுகள் , கமுதி கோட்டை போன்றவை ஆகும்
#சாலைகட்டமைப்பு
மதுரை - தனுஷ்கோடி NH 87
இராமநாதபுரம் - திருச்சி NH 536
சென்னை - கன்னியாகுமரி SH 49
தொண்டி - மதுரை NH 85
சாயல்குடி - தஞ்சாவூர் SH 29
இராமநாதபுரம் - மேலூர் SH 34
சாயல்குடி - அருப்புக்கோட்டை SH 38
பார்த்திபனூர் - கமுதி SH 47
#ரயில்நிலையங்கள்
* இராமேஸ்வரம்
* பாம்பன்
* மண்டபம்
* உச்சிப்புளி
* வாலந்தாரவை
* இராமநாதபுரம்
* சத்திரக்குடி
*பரமக்குடி
*சூடியூர்
No comments:
Post a Comment