Wednesday, December 9, 2020

புளிய மரங்கள் சாலை ஓரத்தில் வளர்வதன் பிண்ணனி தெரியுமா உங்களுக்கு?, புளி மருத்துவம்

 புளிய மரங்கள் சாலை ஓரத்தில் வளர்வதன் பிண்ணனி தெரியுமா உங்களுக்கு?, புளி மருத்துவம்


பண்டைய காலங்களில், இன்று போல நிமிடத்திற்கொரு பேருந்து வசதிகள் இல்லை, அருகில் இருக்கும் ஊருக்கு செல்வதனாலும் சரி, தொலைதூர ஊர்களுக்கு செல்வதானாலும் பெரும்பான்மை மக்கள் எல்லோரும் கால்நடையாகத்தான் செல்வார்கள், அந்த சமயங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்த களைப்பு நீங்கி, சற்று ஓய்வெடுத்து செல்ல, அவர்களுக்கெல்லாம் இக்கால சாலையோர சிறு மோட்டல்கள் போல அக்காலத்தில் அமைந்தவைதான், நிழல் தரும் புளிய மரங்கள். பகலில் புளிய மரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் காற்று களைப்படைந்தவர்களை, புத்துணர்வூட்டி, நடையைத் தொய்வின்றித் தொடர வைக்கும்.
அக்காலங்களில், ஆண்மீகக் கருத்துகளை சொல்லும்போது, உலக விஷயங்களில், 'புளியம் பழமும் ஓடும் போல இருங்கள்!' என்று குறிப்பிடுவார்கள், நன்கு பழுத்த புளியம் பழத்தின் சதை, அதன் ஓட்டில் ஒட்டாது விலகியே இருக்கும், அதுபோல, மனிதர்கள் உலகில் மக்களோடு கலந்து வாழ்ந்தாலும், உலக விசயங்களில் பற்றுக்களை விலக்கி வாழ்ந்து, நற்கதி அடையவேண்டும் என்பதே, இந்த சொலவடையின் பொருள்.

பாதசாரிகளுக்கு உதவும் வண்ணம் அக்கால ஆட்சியாளர்கள், சாலையோரங்களில் எல்லாம் நிழல் தரும் புளிய மரங்களை நட்டு வளர்த்தனர். இந்த காலத்தில் அதுபோல யாரும் நடப்பது இல்லையாகையால், வாகனங்களில் செல்வோர் தாக சாந்தி செய்ய, சாலையோரங்களில், தண்ணீர் கடைகளை (!?) திறந்து வைத்து, குடிமக்கள் திருப்தியடைய வழி வகைகள் செய்திருக்கின்றனர்.
புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, தமிழர் உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய பொருளாகவும் திகழ்கின்றன.
எண்பது அடிகள் வரை உயர்ந்து வளரும் புளிய மரங்கள், நூறாண்டுகள் வரை வாழும் தன்மை மிக்கவை, செடியாக நட்டு வளர்ப்பதன் மூலம் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளில், காய்க்கத் தொடங்கிவிடும், வெப்ப மண்டல மரமான புளியமரத்திற்கு ஓரளவு வளர்ந்தபின் தண்ணீர் தேவையில்லை, வேறு எந்த பூச்சிகள் தொல்லையுமில்லை ஆயினும், குளிர் பிரதேசத்தில் மட்டும் இவை வளராது.

புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் கொட்டைகள், பட்டைகள் அதன் பிசின்கள் என அனைத்தும் பலன் தரக்கூடியவை. அதன் மரம் உறுதிமிக்க மரச்சாமான்கள் செய்ய பயனாகின்றன.
புளிய இலையின் பயன்கள்
சித்த மருத்துவத்தில், புளிய இலை சிறந்த வலி நிவாரணியாக கூறப்படுகிறது.
வலி நிவாரணி :
உடலில் கை மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கங்கள் குறைய, புளிய இலைகளை சூட்டில் வதக்கி ஒரு துணியில் வைத்து, அவ்விடங்களில் ஒத்தடம் கொடுத்து, அதன்பின் வீக்கங்களின் மேல் வதக்கிய புளிய இலைகளை கட்டிவரலாம்.
கால்களில் , கைகளில் தண்ணீர் படும் இடங்களில் உள்ள காயங்கள் எளிதில் ஆறாது, அந்தக் காயங்களை ஆற்ற, புளிய இலைகள், வேப்பிலைகள் இரண்டையும் நீரில் கொதிக்க விட்டு, அந்த நீரை காயங்களின் மேல் நன்கு ஊற்றி சுத்தம் செய்ய, அவை விரைவில் ஆறி தழும்பு விட்டுவிடும்.
ரத்தம் சுத்தமாக :
மலேரியா போன்ற கொசுக்களால் ஏற்படும் விஷ சுரங்கள் விலக, புளிய இலைகளை நன்கு காய்ச்சி, பனை வெல்லம் சேர்த்து பருகிவர, காய்ச்சல்களின் வீரியம் குறையும், இரத்தம் சுத்தமாகும்.
வயிற்றுப் பூச்சிகளுக்கு :
காபிக்கு டிகாக்சன் தயார் செய்யும்போது, சிறிது புளிய இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை ஊற்றி டிகாக்சன் செய்ய, காயங்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும், இந்த டிகாக்சனில் காபி பருக, குழந்தைகளின் வயிற்று பூச்சிகள் அழிந்து, குழந்தைகள் நன்கு பசியெடுத்து சாப்பிடுவர்.
கொழுந்தான புளிய இலைகளை வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிட, உடல் வலுவாகும்.
கண் பாதிப்பு குறைய :
புளிய இலைகளைப்போல, அதன் பூக்களும் நலம் தருபவை, புளியம் பூவை துவையலாக செய்து சாப்பிட, தலைச்சுற்றல் மயக்கம் சரியாகும். கண் சிவப்பு மறைய, புளியம் பூக்களை அரைத்து கண்களைச் சுற்றி பற்று போட்டுவர வேண்டும்.
புளியம் பழம் :
சத்துக்கள் :
நன்கு பழுத்து சதைப் பற்றுடன், சற்றே இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுள்ள புளியம் காய்களே, வெயிலில் நன்கு காயவைத்தபின், சமையலில் நாம் உபயோகிக்கும் புளியாக கிடைக்கிறது. புளியில் வைட்டமின், கால்சியம், இரும்பு மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
புளியம் பழத்தின் நன்மைகள் :
புளியின் பொதுவான மருத்துவ குணங்கள், மலச் சிக்கலை சரிசெய்யும், உடல் சூட்டை சீர்செய்து, கண் எரிச்சலை போக்கி, உடலை நலமாக்கும். சமையலில் இன்றியமையாத ஒரு பொருளாக, புளி விளங்குகிறது. புளி சேர்க்காத சாம்பார், குழம்பு, மற்றும் இரசம் என்பது, தமிழகத்தில் வெகு அரிதான ஒன்று.
வாய்ப்புண் குணமாக :
தேள் கொட்டிய விஷம் இறங்க, வலி போக, புளியை சுண்ணாம்பு கலந்து, கடித்த இடத்தில் இட வேண்டும். வாய்ப் புண்கள் குணமாக, புளி கலந்த நீரில் அவ்வப்போது, வாயை கொப்புளித்து வரலாம்.
அளவுக்கு மீறி மது அருந்தியவர்கள் சிலர், அதிக ஆவேசப்பட்டு, சுற்றியுள்ளவர்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள், மீதி சிலர், மது போதை தலைக்கேறி, தன்னிலை மறந்து மயங்கிக் கிடப்பர், இந்த மோசமான நிலையிலிருந்து இவர்களைத் தெளிய வைக்க, புளியை கரைத்து அந்த நீரை பருக வைக்க, இயல்பு நிலைக்கு திரும்புவர். புளியால் வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற பாத்திரங்கள் ஆபரணங்களை, தூய்மை செய்து, பளபளப்பாக்கலாம்,
புளியங் கொட்டை
புளியங் கொட்டையில் அரிசியில் உள்ளது போன்ற மாவுச்சத்தும், ஆல்புமின் எனும் தாதுவும் மற்றும் எண்ணைத் தன்மையும் உள்ளன. புளியங் கொட்டைகளை தூளாக்கி, பாலில் சிறிது இட்டு, பனங்கற்கண்டு கலந்து பருகிவர, உயிர்த்தாது வளமாகும்.
புரதச் சத்துக்கள் :
உடலில் புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள், புளியங் கொட்டைகளை வறுத்தோ வேக வைத்தோ உணவில் விரும்பும் வகையில் சேர்த்துவர, புரதக் குறைபாடுகள் நீங்கி, உடல் நலம் பெறலாம்.
இரவுகளில் ஏன் தூங்கக் கூடாது :
வெப்பத்தை வெளியிடும் புளியமரம் பகலில் ஆக்சிஜனை அதிக அளவில் வெளியேற்ற, அதை சுவாசிக்கும் வழிப் போக்கருக்கும் அதன் நிழலில் இளைப்பாருபவர்களுக்கும், அவை நன்மை தரும்.
அதுவே இரவில், அதிக அளவில் உடலுக்கு தீங்கு செய்யும் கார்பன் மோனாக்சைடு வாயுவை அதிகம் வெளியேற்றுவதால், இரவில் புளிய மரத்தடியில் படுத்து உறங்க, அந்த காற்று சுவாசத்தில் தடை ஏற்படுத்தி, மூச்சடைப்பை ஏற்படுத்தும்,
எனவே தான், இரவில் புளிய மரத்தடியில் உறங்க வேண்டாம், கால்நடைகளையும் இரவில், அம்மரத்தில் கட்டி வைக்க வேண்டாம் என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள். அக்காலங்களில் அறிவியல் உண்மைகளை, மக்களை பயமுறுத்தும் வண்ணமே, சொல்லி எச்சரித்தனர், அதனால் தான், அதிக படிப்பறிவில்லாத மக்களும் அதை ஏற்று நடந்து வந்தனர்.

Tuesday, December 1, 2020

தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

 பேங்க்-ல் கேஷியரிடம் வாங்கி பணத்தை எண்ணும் போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது...


“மேடம் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா”


பேங்க் கேஷியர் கொஞ்சம் திமிராக 

”ஏன் ஒரு தாள் குறைவது போல் இருக்கா? 


நல்லா எண்ணுங்க சார் சரியா இருக்கும்.

நான் இப்ப பிஸி எண்ணித்தர முடியாது.”


”இல்ல மேடம் ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்கு”


என சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி,

மெஷினில் நாலு தரமும்,கையால் நாலு தரமும் எண்ணி கொடுத்தார்...


தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.*


#வெற்றி நமக்கே....


படித்ததில் பிடித்தது

Thursday, November 26, 2020

சகுந்தலாவா ?

 எங்கள் ஏரியாவில் இருக்கும் என் அபிமான சூப்பர் மார்க்கெட்டுக்கு அரிசி வாங்கப் போயிருந்தேன்.

வழக்கமாய் வாங்கும் 5 கிலோ பை இல்லை, 10 கிலோதான் இருந்தது.


‘சரி, லூஸ்ல எடை போட்டுக் கட்டிக் குடு’ என்றேன் அங்கிருந்த சர்வீஸ் பெண்களில் ஒருத்தியிடம்.


‘அஞ்சு கிலோ சைஸ் பை இல்லை. ரெண்டு கிலோவா ரெண்டு பை தரட்டா?’


‘என்னம்மா பை இல்லைங்கிறே’ என்று அலுத்துக் கொண்டு கல்லாப் பெட்டி சிங்காரத்திடம் ‘என்ன சார், பை இல்லைங்கிறாங்க?’ என்றேன்.


‘சாரி சார்’ என்றார் அவரும்.


‘எங்கேயாவது தேடிப் பாரும்மா. சரக்கு வந்த பை ஏதாவது இருக்கும்’ என்றேன் இன்னொரு பெண்ணிடம்.


‘இல்லைங்க சார்’ என்றாள் இருந்த இடத்திலிருந்து நகராமல்.


‘ம்ம்ஹூம்.. நீங்க யாரும் சரியில்லை. சகுந்தலா எங்கே?’ என்றேன். நான் எப்போது போனாலும் டக்கு டக்கென்று கேட்ட உதவியைச் செய்வாள் அந்தப் பெண்.


‘சகுந்தலாவா?’ என்றாள் அதிர்ந்து முதல் பெண்.


‘சகுந்தலாவா?’ என்று இரண்டாவது பெண்ணும் அதிர்ந்தாள்.


‘சார் அவங்க…’ என்று இழுத்தார் கல்லாப் பெட்டி.


‘என்ன சார் வேணும்?’ என்று கேட்டபடி மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சகுந்தலா.

விஷயத்தைச் சொன்னேன்.


டக்கென்று இரண்டு நிமிஷத்தில் எங்கிருந்தோ ஒரு ஹெச். டி. பி. இ ஃபைபர் பையைக் கொண்டு வந்தாள்.


‘பாத்தீங்களா சார். இதான் சகுந்தலா. இந்த மாதிரிப் பொண்களுக்கு டபிள் இன்க்ரிமெண்ட் தந்து என்கரேஜ் பண்ணுங்க சார்’ என்றேன் கல்லாப் பெட்டியிடம்.



(இதுவரை நடந்தது நிஜ சம்பவம். இனி, அதற்கு சிறுகதை வடிவம் தருவதற்காக இரண்டு வரிகள்)

‘நாங்க அவுங்களுக்கு இன்க்ரிமெண்ட் தர்ரதா? அவுங்கதான் சார் ஓனரோட சம்சாரம்’ என்றார் அவர்.




(போதாது, இன்னும் கொஞ்சம் திரில் வேண்டுமா? இன்னும் நான்கு வரிகள்)






‘என்னம்மா, ரெண்டு வருஷமா உன்னைப் பார்த்துகிட்டு இருக்கேன். ஓனரோட சம்சாரம்ன்னு சொன்னதே இல்லையே?’ என்றேன் சகுந்தலாவிடம்.





‘லாஸ்ட் வீக்தான் சார் கல்யாணம் ஆச்சு’ என்றாள்.

Wednesday, September 23, 2020

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

 "வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:" 

👇👇👇👇 👇 👇


இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,. வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
தேவைக்கு செலவிடு........
அனுபவிக்க தகுந்தன அனுபவி......இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்

 கோவை போகும் வழியில், 
மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன், 

அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்...

கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும், வாயில் விசிலுமாய், 

ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்...

வயோதிகம் காரணமாகவோ,  நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, தனது கால்களை வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...

டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. 

அந்த இடத்தின் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும், அவர் அமரவே இல்லை. 

இது போன்ற எளிய மனிதர்களை கண்டால்,  இயன்றதை தருவது, என் வழக்கம்.


அருகே சென்று, தோளைத் தொட்டு திருப்பி, நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன், பணத்தை கவனித்தவர், 


மெல்ல புன்னகைத்தே, வேணாம் சார் என மறுத்தார்.

அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.            


ஏனெனில் எப்படியும் அது, அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும்.


ஏன் எனக் கேட்டேன்.அவங்க கொடுத்திட்டாங்க.. 

" யாரு " 

 திரும்பி, பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார். நிச்சயமாய் நான் கொடுத்ததை போல, அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.

பணம் கண்டு பேராசை படாத அவரின் உண்மையும், 

உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது... 

மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன். " பேரென்னங்க ஐயா " "முருகேசனுங்க " 


" ஊருல என்ன வேல "

" விவசாயமுங்க "


" எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க "


" நாலு வருசமா செய்றேங்க "


" ஏன் விவசாயத்த விட்டீங்க "


மெல்ல மௌனமானார். 


தொண்டை 

அடைத்த துக்கத்தை,                          

மெல்ல மெல்ல முழுங்கினார். 


கம்மிய குரலோட பேச துவங்கினார். 


ஆனால், 

என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும், 


அவரின் முழு கவனமும், சாலையில் 

செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே

இருந்தது.


" எனக்கு திருநெல்வேலி பக்கம் கிராமமுங்க, 


ஒரு பொண்ணு, 

ஒரு பையன், விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு. 


ஆனா,

மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். 


நானும் முடிஞ்சவரை கடன,

உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், 


ஒண்ணுமே விளங்கலே, 


கடைசிவரை

கடவுளும் கண்ணே தொறக்கலை.


இதுக்கு மேல தாளாதுன்னு, 


இருக்கிற நிலத்த வித்து, 

கடனெல்லாம் அடைச்சுட்டு, 


மிச்ச மீதிய வச்சு, ஒரு வழியா

பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணினேன்.


பையன் இருக்கானே, 

அவனைப் படிக்க வைக்கணுமே, 


அதுக்காக, 

நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இங்கே வந்து வேலைக்கு  சேர்ந்தேன். 


மூணு வேளை சாப்பாடு. 

தங்க இடம், 

மாசம் 7500/- ரூபா சம்பளம். 


இந்த வேலைய பாத்துகிட்டே,

பையனை என்ஜினியருக்கு படிக்க வைச்சேன். 


படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், 

பையன் கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான்.


அப்படியா, 

உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர். 


சரி,

அதான் பையன் வேலைக்கு போறான்ல, 


நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே,


நிச்சயமா

போவேன் சார், 


பையனே 

"நீ கஷ்டப்

பட்டது போதும்ப்பா, 

வந்துடு, 

எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு" தான் சொல்லுறான், 


ஆனா,

இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு, 


அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் "


" எப்போ "


" இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும் 

சார் "


" சரி, 

கடவுள் இருக்கார் பெரியவரே, 


இனி எல்லாமே நல்லதாவே 

நடக்கும் ".


பெரியவர் 

சிரித்தார். 


நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, 


ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, அவரிடம் காதில் ஏதோ சொன்னான், 


பெரியவர் முகம் மலர்ந்தார். 


" கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக்

காங்க" என்றார்.


"என்ன 

சொன்னீங்க சார். 


கடவுளா !!!


கடவுள் என்ன சார் கடவுளு, 


அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைகாரன் சார். 


இல்லன்னா, 

ஊருக்கே சோறு போட்ட என்னைய, 

கடனாளியாக்கி 


இப்பிடி நடு ரோட்டுல நின்னு, 


சாப்பிட 

வாங்கன்னு 

கூப்பிட வைப்பானா,


" மனுஷங்க 

தான் 

ஸார் கடவுள் "

 

முகம் தெரியாத, என்னை நம்பி இந்த வேலையை தந்து, 


நான் வேலைகாரன் தானேன்னு கூட பாக்காம, 


இதோ இந்த  வயசானவனுக்கு கால்

வலிக்கும்ன்னு உட்காற சொல்ற, 

என் முதலாளி ஒரு கடவுள், 


"உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்

படனும், 

பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு, 


கூழோ, 

கஞ்சோ இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்னு " சொன்ன, 

எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற, 

என் மாப்பிள்ளை ஒரு கடவுள்.


கஷ்டப் பட்டு 

அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம, 


" நீ வேலைக்கு போவாதப்பா,

எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன

 என் புள்ள 

ஒரு கடவுள்


நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத,

எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு கடவுள். 


இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சி

அப்பப்ப ஆதரவா பேசுற, 

உங்களை மாதிரியே இங்கே வர்ற, ஆளுங்க எல்லாருமே தான் சார் கடவுள். 


" மனுசங்க தான் 

சார் கடவுள் "


எனக்கு அந்த பெரியவரை அப்படியே கட்டி அணைக்கவே

தோன்றியது, 


இருக பற்றி அணைத்துக் கொண்டேன்.


வேண்டாமென மறுத்த போதும், 


பாக்கெட்டில் பல வந்தமாய் 

பணம் திணித்தேன். 


பஸ் கிளம்பும் 

போது, 

மெல்ல புன்னகைத்த, 


முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து,


தலை வணங்கியே, கும்பிட்டேன்.


ஒவ்வொரு வீட்டுக்குமே,

இது போன்ற தகப்பன் சாமிகள்,

நிறைய பேர் இருக்கத்தான்

செய்கிறார்கள். 


நமக்குத்

தான் எப்போதுமே

கும்பிடவோ, நினைத்துப் பார்க்கவோ மனம் வருவதே இல்லை,


 🙏🏻💓உறவுகளுக்கு🌹🙌🌹 வணக்கம்.

Happy Birthday #Ramanathapuram இராமநாதபுரம் பிறந்தநாள்

 வரலாற்றில் இன்று #இராமநாதபுரம் பிறந்தநாள் 


Happy Birthday #Ramanathapuram


1910 ஆம் ஆண்டில் இதேநாளில் தான் மதுரை - திருநெல்வேலி மாவட்டங்களின் சிலபகுதிகளை ஒன்றினைத்து இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது 


இம்மாவட்டத்தின் தலைநகராக மதுரையே இருந்தது பின்பு நிர்வாக வசதிக்காக 1985 ஆம் ஆண்டு தலைநகர் இராமநாதபுரத்திர்க்கு மாற்றப்பட்டு சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன 


இம்மாவட்டத்தில் உள்ள #வட்டங்கள் 


இராமநாதபுரம் ,பரமக்குடி, முதுகுளத்தூர் ,கடலாடி,கமுதி இராமேஸ்வரம் ,திருவாடானை 

கீழக்கரை ,ராஜசிங்கமங்களம்  என 09 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது 


#நகராட்சிகள் 


இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி


பரமக்குடி (முதல் நிலை நகராட்சி)


 இராமேஸ்வரம் (இரண்டாம் நிலை நகராட்சி ) 


 கீழக்கரை மூன்றாம் நிலை நகராட்சி என நான்கு நகராட்சிகள் உள்ளன 


#பேரூராட்சிகள் 


முதுகுளத்தூர் , கமுதி,  சாயல்குடி ,மண்டபம் ,தொண்டி, ஆர்.எஸ்.மங்களம், அபிராமம் 


#ஊராட்சிகள் 


இராமநாதபுரம் மாவட்டம் 429 ஊராட்சிகளை கொண்டுள்ளது 


#ஒன்றியங்கள் 


முதுகுளத்தூர், போகலூர், திருப்புல்லாணி, மண்டபம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், இராமநாதபுரம், பரமக்குடி, கடலாடி , நயினார் கோவில் 


#கல்வி மாவட்டங்கள் 


* இராமநாதபுரம் 


* பரமக்குடி 


* மண்டபம் 


#வருவாய் மாவட்டங்கள் 


இராமநாதபுரம்  பரமக்குடி 


#சுற்றுலா ஸ்தலங்கள் 


இராமநாதபுரம் அரன்மனை , தனுஷ்கோடி, பாம்பன் பாலம், தேவிபட்டினம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி தர்ஹா, திருப்புல்லாணி, சேதுக்கரை, அப்துல்கலாம் நினைவிடம், ஓரியூர் சர்ச், வாலிநோக்கம் கடற்கரை, அரியமான் பீச், காரங்காடு சூழல் சுற்றுலா, மரபனு பூங்கா, பாம்பன் குந்துக்கால் மண்டபம், மன்னார் வளைகுடா தீவுகள் , கமுதி கோட்டை போன்றவை ஆகும் 


#சாலைகட்டமைப்பு 


மதுரை - தனுஷ்கோடி NH 87

இராமநாதபுரம்  - திருச்சி NH 536 

சென்னை - கன்னியாகுமரி SH 49 

தொண்டி - மதுரை NH 85 

சாயல்குடி - தஞ்சாவூர் SH 29 

இராமநாதபுரம் - மேலூர் SH 34 

சாயல்குடி - அருப்புக்கோட்டை SH 38 

பார்த்திபனூர் - கமுதி  SH 47 


#ரயில்நிலையங்கள் 


* இராமேஸ்வரம் 

* பாம்பன் 

* மண்டபம் 

* உச்சிப்புளி 

* வாலந்தாரவை

* இராமநாதபுரம் 

* சத்திரக்குடி 

*பரமக்குடி 

*சூடியூர்

NRC. சொல்வது என்ன

 பொறுமையாக படியுங்கள்;

#அவசியம் #பகிருங்கள்...


CAA(CAB) & NRC ...


முடிந்தளவு சுருக்கமாக விவரிக்கிறேன் ...


NRC. சொல்வது என்ன ...


"Simply being born in India or having parents who were born in India is not enough ...The NRC requires you or your parents to have been born before a certain cut -off date and the cut-off date is March 24,1971 ..."


புரிகின்றதா வில்லங்கம் ...


நீங்களோ உங்கள் பெற்றோரோ இந்தியாவில் பிறந்திருப்பதால் மட்டுமே நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்ல ...


நீங்கள் குறிப்பிட்ட கட்ஆப் தேதிக்கு முன்பே இந்தியாவில் உள்ளீர்கள் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...!


பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல்துறைதான் ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் ...


ஆனால் NRC படி நீங்கள் குடிமகன்தான் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் (Documentary Evidences) ஆவணங்கள் மூலமாக நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...


சரி ...அதற்கு என்ன டாகுமெண்ட்ஸ் தேவை என்பதைப் பார்ப்போம் ...


LIST A மற்றும் LIST B என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாகுமெண்டுகள் உங்களிடம் இருக்க வேண்டும் ...


LIST -A ...


1.Electoral rolls upto March 25,1971

2.NRC of 1951

3.Land and Tenancy Records

4.Citizenship certificate

5.Permanent resident certificate

6.Passport

7.Bank or LIC documents

8.Permanent Residential Certificate

9.Educational certificates and court orders

10.Refugee Registration certificate


LIST -B


1.Land documents

2.Board or university certificates

3.Bank/LIC/Post office records

4.Birth certificate

5.Ration card

6.Electoral rolls

7.Other legally acceptable documents

8.A circle officer or Grama panchayat secretary certificate for married women


விஷயம் என்னவென்றால் LIST - A டாகுமெண்ட்ஸ் கட் ஆப் தேதிக்கு முந்தியதாக இர்ர்க்க வேண்டும் ...அதாவது மார்ச் 25,1971 க்கு முந்தைய டாகுமெண்ட்ஸ்ஸாக அவை இர்ர்க்க வேண்டும் ...!!


வில்லங்கம் புரிகிறதா ...


இந்த LIST -A டாகுமெண்ட்ஸ்ஸுக்கு சப்போர்டிவ்வாக LIST -B டாகுமெண்ட்ஸ்ஸை நீங்கள் காட்ட வேண்டும் ...!!


உங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியப்படும் என்பதை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ...


உங்களால் அப்படிக் காட்ட இயலவில்லையென்றால் உடனடியாக நீங்கள் கைது செய்யப்பட்டு Detention Camp ல் அடைக்கப்படுவீர்கள் ...!


அஸ்ஸாமில் உள்ள Detention Camp என்பது அங்குள்ள சிறைச்சாலைகள்தான் ...!


ஆக ...மேற்கூரிய டாகுமெண்டுகள் இல்லையென்றால் நீங்கள் சிறைக்குச் செல்வீர்கள் ...மனைவி,குழந்தைகளுடன் ...!!


மேல்முறையீட்டிற்கு நீங்கள் Foreign Tribunalல் வழக்கு நடத்தலாம் அல்லது Concern High Courtல் வழக்கு நடத்தலாம் ...


அதிலும் ஸ்டே அல்லது ஜாமீன் கிடைத்தால் மட்டுமே நீங்கள் வெளியே வர இயலும் ...!!


அதனால்தான் சொல்கிறேன் பாஜக மக்களுக்கு எதிரான கட்சி என்று ...


இதனால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது இந்துக்களே ...!


பல இலட்சம் இந்துக்கள் Detention Campல் சொத்திழந்து,மானம் இழந்து மனைவி குழந்தைகளுடன் சிறையில் உள்ளார்கள் ...!!


இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பகீர் என்கிறதல்லவா ...


நாடு முழுவதும் இதே NRC கணெக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக நேற்று பகிரங்கமாக அறிவித்து விட்டது ...


1951லிருந்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தாராளமாக மகிழ்ச்சியாக இருங்கள் ...


நான் விசாரித்தவரை பலரும் ரேஷன் கார்டு,ஆதார் கார்டு தவிர ஒன்றுமில்லை என்றே சொல்கிறார்கள் ...


இந்த NRC பயங்கரத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் ...!


அத்தனை டாகுமெண்ட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு அரசு அதிகாரியிடம் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...


இளம்பெண்களின் கதி என்னாகும் ...


சாதாரண எக்ஸாம் இன்டர்னெல் மார்க் போடவே மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் காலம் இது ...!


குடியுரிமை தருவது என்றால் சும்மாவா ...எது வேண்டுமானாலும் நடக்கும் ....


ஒரு வழக்கறிஞராக ...


நான் சொல்வது இந்த CAA வே நமது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ஆர்ட்டிக்கிள் -14 க்கு எதிரானது ...


என உறுதியாகச் சொல்லுவேன் ...


NRC யைப் பொறுத்த வரை ...


நாங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ரயிலை விற்போம்,துறைமுகத்தை விற்போம்,நிலத்தை விற்போம்,பொதுத் துறை நிறுவனங்களை விற்போம் ...


மீறிக் கேள்வி கேட்டால் ...


நீ இந்தியனா என்று திருப்பிக் கேட்போம் ...நீ டாக்குமெண்டைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான் ...


டாகுமெண்ட்  இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Detention Camp ...


முடிவு இனி 130 கோடி மக்கள் கைகளில் ...


தட்ஸ் ஆல் ...


தோழமையுடன்


வழக்கறிஞர் திலகர்


**மூத்த வழக்கறிஞர் #Thilakar #Sspk அவர்கள் பதிவு... அத்தா: Shahul Hameed அவர்கள் வழியாக.