"நாக்ரி.காம்' இணையதளத்தின் செயல் இயக்குனர் சுரேஷ்: சர்வதேச மற்றும் இந்திய அளவில் உள்ள பொருளாதார, தொழில் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில், பல துறைகளில், அதிக அளவு திறமையான மனித வளம் தேவைப்படுகிறது. அந்த வரிசையில் முதலிடத்தை பிடிப்பது, உள்கட்டுமானத் துறை. இதில், ரயில்வே, எரிபொருள் துறையான ஆயில் மற்றும் காஸ், ஏர்போர்ட், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில், தேவை அதிகம் இருக்கும். சிவில், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற பொறியியல் படிப்புகளையும் மற்றும் ஆர்க்கிடெக்சர் படிப்பையும் முடிப்பவர்களுக்கு எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். அடுத்த இடத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை; இந்த துறையுடன் தொடர்புடைய கே.பீ.ஓ., - பி.பீ.ஓ., - ஐ.டி.இ.எஸ்., ஆகியவற்றில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கும், கலை மற்றும் அறிவியல் படிப்பவர்களில், ஆங்கிலம் பேசும் திறமை கொண்டவர்களுக்கும் வேலை நிச்சயம். அடுத்து பயோடெக்னாலஜி; இத்துறையில், முன்னணி நிறுவனங்கள், பணத்தை முதலீடு செய்து கொண்டிருப்பது, வளர்ச்சிக்கான ஆதாரம். வேதியியல், உயிர்வேதியியல், நுண் உயிரியல் படிப்பவர்கள், தயக்கமில்லாமல் இதில் சேரலாம். நான்காம் இடத்தில் இருக்கும் படிப்பு, பேஷன் டிசைனிங்; கடந்த 15 ஆண்டுகளில், எல்லா வயதினருக்கும், ஆடைகள் மீதான ரசனை அதீதமாக வளர்ந்துள்ளது. பேஷன் சம்பந்தப்பட்ட அனைத்து படிப்புகளும், நல்ல வருவாயை ஈட்டித் தரும். வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மட்டும் இல்லாது, அதில் டிப்ளமோ, ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், கடினமாக உழைத்தால், அடுத்த கட்டத்திற்கு விரைவாக முன்னேற முடியும்
Saturday, February 19, 2011
வாழ்க்கையை வளமாக்கும் படிப்புகள்...

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment