Tuesday, February 22, 2011

ஸ்டெம் செல்லால் மூளை பிரச்னைக்கு தீர்வு!

http://img.dinamalar.com/data/large/large_192553.jpg
பல் மருத்துவர் ரங்கநாதன்: "ஸ்டெம் செல்' ஆராய்ச்சி தற்போது, உலகம் முழுவதும் முழு வீச்சில் நடக்கிறது. பல்லில் உள்ள, "ஸ்டெம் செல்'லை எடுத்து, மூளை தொடர்பான நோய்கள், முதுகுத் தண்டு பிரச்னைகளை குணப்படுத்த முடியும். தற்போது, நவீன மருத்துவத்தில், "ஸ்டெம் செல்'
ஆராய்ச்சிக்கு, இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் உள்ளது.கல்லீரல், இதயம் என்று, உடலின் எந்த உறுப்பில் பிரச்னை என்றாலும், தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால், நோய் மேலும் பரவாமல், கட்டுப்படுத்தலாம். பல்லில் எடுக்கப்படும், "ஸ்டெம் செல்' மூலம், மூளைக் குறைபாடுகளை குணப்படுத்தும் ஆராய்ச்சிகள் தீவிரமாகியுள்ளன. ஆனால், மூளையில் குறிப்பிட்ட பகுதி பாதிப்புக்குள்ளானால், அவ்வளவு தான்... பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது.நம் உடலில் எங்கிருந்து வேண்டுமானலும், "ஸ்டெம் செல்' எடுக்கலாம். பற்களில் இருந்து ஸ்டெம் செல் எடுப்பது எளிது. குழந்தைகளின் பால் பற்கள், பல காரணங்களால் பிடுங்கப்படும் நம் பற்கள், இவற்றைப் பாதுகாத்து, அவற்றில் இருந்து, "ஸ்டெம் செல்' எடுக்கலாம்.இப்படி எடுக்கப்படும் செல்லை நேரடியாக, மூளையின் பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தலாம் அல்லது சோதனைக் கூடத்தில் வைத்து வளரச் செய்தும் மூளையின் பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தலாம். பல்லில், உள்ள நரம்புகளும், மூளையில் உள்ள நரம்புகளும் ஒத்துப் போவதால், பல் "ஸ்டெம் செல்'லை வைத்து, மூளை பிரச்னைகளை முழுமையாகத் தீர்க்க முடியும்.

No comments:

Post a Comment