Showing posts with label அழகு குறிப்பு. Show all posts
Showing posts with label அழகு குறிப்பு. Show all posts

Thursday, February 2, 2012

தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்


Dandruffகூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம்

Tuesday, January 31, 2012

கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட!

Nandita Das
சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து இன்றைய இளம் தலைமுறையினர்ஆழ்மனதில் பதிந்து போய் விடுகிறது. கொஞ்சம் கறுப்பாக இருந்தாலும் முகத்தை சிவப்பாக்க சந்தைகளில் விற்கும் எண்ணற்ற அழகுசாதன கிரீம்களை வாங்கி முகத்தில் பூசி வெள்ளையடித்துக் கொள்கின்றனர். அதெல்லாம் பணத்திற்கு வேட்டு வைக்கும் சமாச்சாரம். கறுப்பானவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என்பது அழகுக்கலை நிபுணர்கள் களின் நம்பிக்கை வார்த்தையாகும்.

அகத்தின் அழகு, நகத்திலும் தெரியும்!


நம்மில் பலர் முகத்தை அழகாக்குவதற்கு அக்கறை எடுத்துக் கொள்வதைப்போல உடல் உறுப்புகள் பலவற்றினை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல நகத்திலும் தெரியும்.
Nail Care
நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் எற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும். நகத்தினை பாதுகாப்பது குறித்து அழகியல் நிபுணர்கள் கூறும் கருத்துக்கள் உங்களுக்காக.

Thursday, April 7, 2011

எந்த வயதில் பெண்கள் அழகு?

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTuNvLRuRPJsXjrTur0iN1arYM9dRIw0y16-4smQLxZppHpmJLnDA
ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

Thursday, February 10, 2011

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா... என்று தேடிப்போக வேண்டாம்.

கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.