Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, January 16, 2021

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.

 அவர் இறந்து விட்டார் 

அடக்கம் செய்யணும்

சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!! 

.

மெல்ல எட்டிப் பார்த்தேன் 

மூச்சு இல்லை – ஆனால் 

இப்போதுதான் இறந்திருந்தார் 

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!  

.

இருபது வருடங்கள் 

முன்னாடி – அவர் மனைவி 

இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!! 

என்று யாரும் கேட்காத 

நேரத்தில் – அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

பொண்டாட்டி போனதுமே

போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று

காதுபட மருமகள் பேசியபோது 

அவர் இறந்திருந்தார் அப்போதும் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

தாய்க்குப் பின் தாரம் 

தாரத்துக்குப் பின் ..

வீட்டின் ஓரம் ...!!! 

என்று வாழ்ந்த போது – அவர் 

இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை ..!!!

.

காசு இங்கே 

மரத்திலேயா காய்க்குது - என்று 

மகன் அமிலவார்த்தையை 

வீசிய போது..!!! 

அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

என்னங்க...!!! 

ரொம்ப தூரத்திலே இருக்குற 

முதியோர் இல்லத்திலே விட்டு 

தலை முழுகிட்டு வந்திடுங்க...!!! 

என்று காதிலே விழுந்த போதும் 

அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!! 

.


உனக்கென்னப்பா...!!!

பொண்டாட்டி தொல்லை இல்லை 

என்று வாழ்த்துவது போல 

கிண்டலடிக்கப் பட்ட போது 

அவர் இறந்திருந்தார்..!!!

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

.

இப்போதுதான்

இறந்தாராம் என்கிறார்கள்..!!!

எப்படி நான் நம்புவது..???

நீங்கள் செல்லும் வழியில் 

இப்படி யாராவது

இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஒரு வினாடியாவது நின்று

பேசி விட்டுச் செல்லுங்கள்..!!! 

.

இல்லையேல்...!!!! 

.

உங்கள் அருகிலேயே 

இறந்து கொண்டிருப்பார்கள் 

புரிந்து கொள்ளுங்கள் ..

.

வாழ்க்கை என்பது 

வாழ்வது மட்டுமல்ல..!!! 

வாழ வைப்பதும்தான் ..!!!!


😥😥😥😭😭😭😭😭😭


பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.


வி.ச.செம்மேனிநாதன்

Thursday, November 1, 2012

வருந்தாத மாக்கள்


வருந்தாத மாக்கள் :
--------------------------------


கடவுளின் அருள் பெற்று பயன் அடைந்த
கூட்டத்தை விட
கடவுளின் பெயர் சொல்லி பயன் அடைந்த
கூட்டம் அதிகம்

தியானமும் யோகாவும் விற்பனைக்கு
ஞானமும் கடவுளும் கற்பனைக்கு

பாதி நேரம் அருளுரை
மீதி நேரம் ஆணுறை
கட்டினிலே கன்னி
கையிலே கமண்டலம்

ஆசையை துறந்தவர்கள் இருந்த
பதவியிலே இன்று
ஆடையை துறந்தவன் அமர்கிறான்

திரை போட்டு காட்டியும்
திருந்தாத மக்கள் _ சிலர்
கறை பட்ட பின்பும்
வருந்தாத மாக்கள்

- வை . நடராஜன்

Saturday, January 28, 2012

முகமூடி



தொடர் ஹாரன் சத்தம் கேட்கும்
டி நகர் பஸ்ஸ்டாண்ட் ரூம்
புணர்ந்து போட்ட பெண் போலிருந்தது

முட்டை தோசை
குஷ்பூ இட்லி
இட்லி போடும் குண்டு பெண்

பேக்கிரி உனக்கு
உங்கக்கா எனக்கு

அய்யோ..
ஆணாதிக்கவாதி ஆயிட்டேனோ?

உள்ளே போனது நெப்போலியன்
வெளியே வந்தான் அலெக்ஸ்ஸாண்டர்

பல்லில் சிக்கிய சிக்கன் துண்டு
வேறொருவனோடு ஓடிப் போன காதலி

போடாங்க.. அவ என்ன பெரிய பு...யா?

புலம்பியபடி படுக்கையில் விழுந்தேன்
அடுத்த நாள் ”காலை” தயாராய் இருந்தது
சலவை செய்த முகமூடியோடு.

- கேபிள் சங்கர்

Friday, January 27, 2012

பிரிவிற்குப் பின்

பிரிவிற்குப் பின்
உன்
வருகைக்காகக்
காத்திருக்கையில்
ஒரு கண்ணீர்த்துளியும்
ஒரு புன்னகையும்
காத்திருக்கின்றன.
மறைத்துவைக்கும்
யதார்த்த
யத்தனிப்பில் நான்.

அன்புசிவன் (ப.சிவகுமார்)
27.01.2012 / 07,50 காலை

Tuesday, January 24, 2012

காத்திருப்புக்கள்

காத்திருப்புக்கள்

உனக்கான
காத்திருப்பில்
உருவாகாத
உனது தேநீரும்
உறிஞ்சப்பட்டிக்கொண்டிருக்கும்
எனது தேநீரும்
உள்ளுக்குள்ளேயே
ஓடும்
வார்தைகளும்
அடங்கும்.

எதைச் சொல்ல?


எதைச் சொல்ல?


எதைச்சொல்ல நினைத்தாய் 


ஏன் எதையும் சொல்லாமலேயே இருந்தாய் 


கடைசிச் சந்திப்பின் மௌனமா


முற்றுப்பெற்றுக் கொண்டிருந்தொரு நட்பின் 


முடிவுரையா


நீ


விட்டுச்சென்ற குறிப்பேடு


விரிக்கப்படாமலேயே கிடக்கிறது


சொல்லாமல்


விட்டுச்சென்ற வார்த்தைகள்


விழுந்துவிடலாமென்ற பயத்தோடு.



Thursday, September 8, 2011

நம் காதல்...

நான்  கை  குலுக்கி

வாழ்த்து  சொன்னபோது

களங்கப்பட்டுப்போய்

இருக்குமோ? 

© ம. ரமேஷ் கவிதைகள்
-----------------------------

நான் கை குலுக்கி
வாழ்த்து சொன்னபோது
களங்கப்பட்டுப்போய்

இருக்குமோ?
நம் காதல்.
 
© ம. ரமேஷ் கவிதைகள்
---------------------------------------
நண்பர்களாக

இருப்போம் என்கிறாய்!

என்னால்

முடியவில்லை.

இன்றும் -

காதலோடுதான்
பேசிப் பழகுகிறேன்.

© ம. ரமேஷ் கவிதைகள் 
-------------------------------------------

காதலுக்குக் கண்ணில்லை! கண்ணீர் உண்டு!!*
--------------------------------------------------

நீ   என்னை

நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல

இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்

© ம. ரமேஷ் கவிதைகள் 
-------------------------------

Thursday, October 14, 2010

நெருங்கிப் பழகாதே நெஞ்சமே

    நெருங்கிப் பழகாதே நெஞ்சமே - நீ நெருங்கிட்டா துயரம்தான் மிஞ்சுமே ஒட்டாமல் பழக நீயும் தெரிஞ்சிக்கோ- அது ஓடிஞ்சிபுட்டா மனசு வலிக்கும் புரிஞ்சுக்கோ தாமரைஇலைத் தண்ணீர் போல நட்புடா - அது தடம் புரண்டு போனா அது தப்புடா சிரிச்சிக்கிட்டே வருகின்ற நட்புடா - அது சிதையும் போது மனசுக்குள்ளே கடபுடா வெள்ளந்தியா இருக்கவேணும் மனசுடா - அது கொள்ளை போகாம காத்துகிட்டா ஒரு தினுசுடா நல்ல நட்பை தேடிதேடி அடைஞ்சிடு - அது கிடைக்காட்டி தனியாளா வாழ்ந்துடு *என்றும் அன்புடன் சா.கி.நடராஜன்.

Tuesday, July 27, 2010

அவள் நினைவுகளின் மிச்சங்கள் !!!

தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் ! 
 அவசர வாழ்க்கையினூடே
எப்பொழுதோ தொலைந்துப்போன
புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன ! 
பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.! 
ழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!

ருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!

சுகமான தோல்வி

    தோற்பது சுகம் என் இனியத் தந்தையின் வாதத்தில் தோற்பது சுகம் என் இனியத் தாயின் கண்டிப்பில் தோற்பது சுகம் என் இனிய ஆசானின் அறிவில் தோற்பது சுகம் என் இனிய நண்பனின் விவாதத்தில் தோற்பது சுகம் என் இனிய மனைவியின் ஊடலில் தோற்பது சுகம் என் இனிய மழலையின் விளையாட்டில்  
    என்றும் அன்புடன்
    சா.கி.நடராஜன்.