Friday, December 10, 2010

பிடித்ததை செய் வெற்றி நிச்சயம்

பிடித்ததை செய் வெற்றி நிச்சயம்!' பேக்கரி நடத்தும் ஜூலியட் வளர்மதி: படித்தது, வளர்ந்ததெல்லாம் சென்னையில். என் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். சின்ன வயதில் இருந்தே தேவையான சுதந்திரம், தைரியம் கொடுத்து வளர்த்தாங்க. ஒன்பதாவது படிக்கும் போதே தனியாக தாசில்தார் அலுவலகத்திற்கு போய் ஜாதி சான்றிதழ் வாங்கும் அளவிற்கு பழகிக் கொடுத்தாங்க. தடகள விளையாட் டில் தேசிய அளவில் பதக்கம், ஜனாதிபதி கையால் சமூக சேவைக்கான விருது கூட வாங்கியிருக்கிறேன். சென்னை அரசு பாலிடெக்னிக்கில் இன்ஸ்ட்ரூமென்ட் டெக்னாலஜி முடித்துவிட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் அப்ரன்டீசா சேர்ந்தேன். அந்த வருடம் இந்திய அளவில் ஐந்து பேருக்குதான் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதில் நானும் ஒருத்தி. அடுத்து, சென்னை அண்ணா பல்கலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். அதன் பின், திருமணம். என் கணவர் என்னை பி.இ., படிக்க வைத்தார். அடுத்து எம்.இ., முடித்தேன். உடனே தனியார் கல்லூரியில் லெக்சரர் வேலை கிடைத்தது. ஏனோ நான் பார்த்த வேலையில் ஒரு பிடிப்பில்லாமல் இருந்தது.