Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, January 16, 2021

சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்

 பேங்க்-ல் கேஷியரிடம் வாங்கி பணத்தை எண்ணும் போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது...


“மேடம் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா”


பேங்க் கேஷியர் கொஞ்சம் திமிராக 

”ஏன் ஒரு தாள் குறைவது போல் இருக்கா? 


நல்லா எண்ணுங்க சார் சரியா இருக்கும்.

நான் இப்ப பிஸி எண்ணித்தர முடியாது.”


”இல்ல மேடம் ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்கு”


என சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி,

மெஷினில் நாலு தரமும்,கையால் நாலு தரமும் எண்ணி கொடுத்தார்...


தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.*


#வெற்றி நமக்கே....


படித்ததில் பிடித்தது

மனித நேயம் .

 மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில், ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜையில் அமர்ந்தார்.

அவரது சட்டை சேறும் சகதியுமாக இருந்தது, முதல் இரண்டு பொத்தான்கள் காணவில்லை.  சாலையின்  வேலை செய்யும் ஒரு தொழிலாளி போல் இருந்தது, சிறுமியின் ஃபிராக் கழுவப்பட்டு சுத்தமாக இருந்தது, அவள் தலைமுடியை எண்ணெயிட்டு சுத்தமாக வைத்திருந்தாள்.

அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது.  ஹோட்டலின் முழு அழகையும் அவள் ரசிப்பதை நாங்கள் கவனித்தோம்.  மேலே இருந்து குளிர்ந்த காற்றை வழங்கிய விசிறியின் மீது அவள் கண்கள் ஒரு கணம் ஓய்வெடுத்தன.

குஷன் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சற்று எழுந்து அவள் அதை ரசிப்பதைக் கண்டோம்.

பணியாளர் இரண்டு பெரிய கண்ணாடி குளிர்ந்த நீரை அவர்களுக்கு முன்னால் வைத்தார்.

அவர் தனது மகளுக்கு ஒரு மசாலா தோசை கூறினார்.  அவன் அதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மீண்டும் தெளிவாகியது.

உங்களுக்கு என்ன வேண்டும்?  என்று பணியாளர் கேட்டார்.

எனக்கு எதுவும் தேவையில்லை: அவர் பதிலளித்தார்.

சற்று நேரத்தில், சட்னி மற்றும் சாம்பருடன் ஒரு சூடான, காரமான மசால் தோசை வந்தது,

சிறுமி தோசை சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள், அவர் அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே குளிர்ந்த நீரைப் பருகினார்.

பின்னர் அவரது அலைபேசி ஒலித்தது.  இது பழைய மாடல்.   மறுபக்கம் அவரது நண்பர் என்று தோன்றியது.

இன்று தனது மகளின் பிறந்த நாள் என்றும் அவர் அவளுடன் ஹோட்டலில் இருப்பதாகவும் கூறினார்.

பள்ளியில் முதல் இடத்தை வென்றால், பிறந்தநாளன்று ஹோட்டலில் இருந்து தனது மசாலா தோசை வாங்கி தருவதாக  முன்பு உறுதியளித்ததாகவும், அவர் முதல் இடத்தை வென்றதால் இப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார் என்றும் அவர் கூறினார்.

(அவர் பேசியது தெளிவாக கேட்டது)… இல்லை, நாங்கள் இருவரும் எப்படி சாப்பிட முடியும்?  எங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?  சில நாட்களாக எனக்கு எந்த குறிப்பிடத்தக்க வேலையும் இல்லை, வீட்டில் என் மனைவி தயாரித்த சாப்பாடு  உள்ளன. எனக்கது போதும்.

இதற்கு முன் காட்சியையும் உரையாடலையும் கேட்ட நான், எனது தேனீரை என் உதடுகளுக்கு கொண்டு வந்த சூடான தேநீர் நாக்கு எரிந்தபோது அவர்களிடமிருந்து கண் அகற்றப்பட்டது.

யார் பணக்காரராகவோ அல்லது ஏழையாகவோ... தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வர் என்பதை நான் உணர்ந்தேன்.

நான் எழுந்து கவுண்டருக்குச் சென்று எங்கள் ஐஸ்கிரீம் மற்றும் தேநீருக்கான பணத்தைத் தவிர இரண்டு மசாலா தோசைகளுக்கான பணத்தை ஒப்படைத்தேன்.

அவர் தந்தையையும் மகளையும் சுட்டிக்காட்டி மெதுவாக கடைக்காரரிடம் கூறினார்

'அந்த மனிதனுக்கு இன்னொரு தோசை கொடுங்கள், அவர் பணம் கேட்டால்,' இன்று உங்கள் மகளின் பிறந்த நாள், அவள் பள்ளியில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறாள், எனவே இது ஹோட்டலில் இருந்து உங்கள் மகளுக்கு கிடைத்த பரிசு.  இதை இன்னும் சிறப்பாகப் படிப்பதற்கான ஊக்கமாக இதை நாம் கருத வேண்டும்.  அவருக்கு இலவசம் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், அது அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும். "

ஹோட்டல் உரிமையாளர் புன்னகைத்து, "இந்த பெண்ணும் அவளுடைய தந்தையும் இன்று எங்கள் விருந்தினர்கள். அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இந்த பணத்தை வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் அல்லது இது போன்ற பிற தேவைக்கும் பயன்படுத்தலாம்."

பணியாளர் மற்றொரு தோசை மேசையில் வைத்தார், நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறுமியின் தந்தை திடீரென்று அதிர்ச்சியில் அவரிடம், "நான் ஒரு தோசை சொன்னேன், எனக்கு இது தேவையில்லை" என்று கூறினார்.

பின்னர் ஹோட்டல் உரிமையாளர் அருகில் சென்று, “உங்கள் மகள் பள்ளியில் முதலில் வருவதற்கு இது எங்கள் பரிசு,

நீங்கள் ஒவ்வொருவருக்கும், மசாலா தோசை இன்று ஹோட்டலின் வகை. '

தந்தையின் கண்கள் விரிந்தன, அவர் தனது மகளை நோக்கி, "பார், மகளே, நீ கடினமாகப் படித்தால் வாழ்க்கையில் இது போன்ற பல பரிசுகளைப் பெறலாம் என்று பாருங்கள்."

அவர் ஒரு பேக் பண்ண முடியுமா என்று பணியாளரிடம் கேட்டார்.  அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், அதை சாப்பிட அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறினார்.

"இல்லை,  நீங்கள் அதை இங்கே சாப்பிடலாம். வீட்டிற்கு  நான் இன்னும் 3 தோசையும் ஒரு இனிப்பு  பொதி யும் பேக்செய்கிறேன்."

இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் மகளின் பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் இனிப்புகளுடனும் கொண்டாடுங்கள், அவளுடைய நண்பர்களை அழைக்கவும், அதில் எல்லா மிட்டாய்களும் இருக்கும். '

இதையெல்லாம் கேட்டபோது, ​​என் கண்களில், மகிழ்ச்சியால் கண்ணீர்.

ஒரு நல்ல செயலைச் செய்ய ஒரு சிறிய படி எடுப்பதில் எங்களுடன் சேர பல மனிதாபிமான மக்கள் முன்வருவார்கள் என்பதை உணர்ந்தேன். வாழ்க வளமுடன்

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.

 அவர் இறந்து விட்டார் 

அடக்கம் செய்யணும்

சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!! 

.

மெல்ல எட்டிப் பார்த்தேன் 

மூச்சு இல்லை – ஆனால் 

இப்போதுதான் இறந்திருந்தார் 

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!  

.

இருபது வருடங்கள் 

முன்னாடி – அவர் மனைவி 

இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!! 

என்று யாரும் கேட்காத 

நேரத்தில் – அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

பொண்டாட்டி போனதுமே

போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று

காதுபட மருமகள் பேசியபோது 

அவர் இறந்திருந்தார் அப்போதும் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

தாய்க்குப் பின் தாரம் 

தாரத்துக்குப் பின் ..

வீட்டின் ஓரம் ...!!! 

என்று வாழ்ந்த போது – அவர் 

இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை ..!!!

.

காசு இங்கே 

மரத்திலேயா காய்க்குது - என்று 

மகன் அமிலவார்த்தையை 

வீசிய போது..!!! 

அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

என்னங்க...!!! 

ரொம்ப தூரத்திலே இருக்குற 

முதியோர் இல்லத்திலே விட்டு 

தலை முழுகிட்டு வந்திடுங்க...!!! 

என்று காதிலே விழுந்த போதும் 

அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!! 

.


உனக்கென்னப்பா...!!!

பொண்டாட்டி தொல்லை இல்லை 

என்று வாழ்த்துவது போல 

கிண்டலடிக்கப் பட்ட போது 

அவர் இறந்திருந்தார்..!!!

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

.

இப்போதுதான்

இறந்தாராம் என்கிறார்கள்..!!!

எப்படி நான் நம்புவது..???

நீங்கள் செல்லும் வழியில் 

இப்படி யாராவது

இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஒரு வினாடியாவது நின்று

பேசி விட்டுச் செல்லுங்கள்..!!! 

.

இல்லையேல்...!!!! 

.

உங்கள் அருகிலேயே 

இறந்து கொண்டிருப்பார்கள் 

புரிந்து கொள்ளுங்கள் ..

.

வாழ்க்கை என்பது 

வாழ்வது மட்டுமல்ல..!!! 

வாழ வைப்பதும்தான் ..!!!!


😥😥😥😭😭😭😭😭😭


பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.


வி.ச.செம்மேனிநாதன்

Tuesday, December 1, 2020

தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

 பேங்க்-ல் கேஷியரிடம் வாங்கி பணத்தை எண்ணும் போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது...


“மேடம் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா”


பேங்க் கேஷியர் கொஞ்சம் திமிராக 

”ஏன் ஒரு தாள் குறைவது போல் இருக்கா? 


நல்லா எண்ணுங்க சார் சரியா இருக்கும்.

நான் இப்ப பிஸி எண்ணித்தர முடியாது.”


”இல்ல மேடம் ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்கு”


என சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி,

மெஷினில் நாலு தரமும்,கையால் நாலு தரமும் எண்ணி கொடுத்தார்...


தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.*


#வெற்றி நமக்கே....


படித்ததில் பிடித்தது

Thursday, November 26, 2020

சகுந்தலாவா ?

 எங்கள் ஏரியாவில் இருக்கும் என் அபிமான சூப்பர் மார்க்கெட்டுக்கு அரிசி வாங்கப் போயிருந்தேன்.

வழக்கமாய் வாங்கும் 5 கிலோ பை இல்லை, 10 கிலோதான் இருந்தது.


‘சரி, லூஸ்ல எடை போட்டுக் கட்டிக் குடு’ என்றேன் அங்கிருந்த சர்வீஸ் பெண்களில் ஒருத்தியிடம்.


‘அஞ்சு கிலோ சைஸ் பை இல்லை. ரெண்டு கிலோவா ரெண்டு பை தரட்டா?’


‘என்னம்மா பை இல்லைங்கிறே’ என்று அலுத்துக் கொண்டு கல்லாப் பெட்டி சிங்காரத்திடம் ‘என்ன சார், பை இல்லைங்கிறாங்க?’ என்றேன்.


‘சாரி சார்’ என்றார் அவரும்.


‘எங்கேயாவது தேடிப் பாரும்மா. சரக்கு வந்த பை ஏதாவது இருக்கும்’ என்றேன் இன்னொரு பெண்ணிடம்.


‘இல்லைங்க சார்’ என்றாள் இருந்த இடத்திலிருந்து நகராமல்.


‘ம்ம்ஹூம்.. நீங்க யாரும் சரியில்லை. சகுந்தலா எங்கே?’ என்றேன். நான் எப்போது போனாலும் டக்கு டக்கென்று கேட்ட உதவியைச் செய்வாள் அந்தப் பெண்.


‘சகுந்தலாவா?’ என்றாள் அதிர்ந்து முதல் பெண்.


‘சகுந்தலாவா?’ என்று இரண்டாவது பெண்ணும் அதிர்ந்தாள்.


‘சார் அவங்க…’ என்று இழுத்தார் கல்லாப் பெட்டி.


‘என்ன சார் வேணும்?’ என்று கேட்டபடி மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சகுந்தலா.

விஷயத்தைச் சொன்னேன்.


டக்கென்று இரண்டு நிமிஷத்தில் எங்கிருந்தோ ஒரு ஹெச். டி. பி. இ ஃபைபர் பையைக் கொண்டு வந்தாள்.


‘பாத்தீங்களா சார். இதான் சகுந்தலா. இந்த மாதிரிப் பொண்களுக்கு டபிள் இன்க்ரிமெண்ட் தந்து என்கரேஜ் பண்ணுங்க சார்’ என்றேன் கல்லாப் பெட்டியிடம்.



(இதுவரை நடந்தது நிஜ சம்பவம். இனி, அதற்கு சிறுகதை வடிவம் தருவதற்காக இரண்டு வரிகள்)

‘நாங்க அவுங்களுக்கு இன்க்ரிமெண்ட் தர்ரதா? அவுங்கதான் சார் ஓனரோட சம்சாரம்’ என்றார் அவர்.




(போதாது, இன்னும் கொஞ்சம் திரில் வேண்டுமா? இன்னும் நான்கு வரிகள்)






‘என்னம்மா, ரெண்டு வருஷமா உன்னைப் பார்த்துகிட்டு இருக்கேன். ஓனரோட சம்சாரம்ன்னு சொன்னதே இல்லையே?’ என்றேன் சகுந்தலாவிடம்.





‘லாஸ்ட் வீக்தான் சார் கல்யாணம் ஆச்சு’ என்றாள்.

Wednesday, September 23, 2020

அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்

 கோவை போகும் வழியில், 
மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன், 

அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்...

கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும், வாயில் விசிலுமாய், 

ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்...

வயோதிகம் காரணமாகவோ,  நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, தனது கால்களை வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...

டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. 

அந்த இடத்தின் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும், அவர் அமரவே இல்லை. 

இது போன்ற எளிய மனிதர்களை கண்டால்,  இயன்றதை தருவது, என் வழக்கம்.


அருகே சென்று, தோளைத் தொட்டு திருப்பி, நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன், பணத்தை கவனித்தவர், 


மெல்ல புன்னகைத்தே, வேணாம் சார் என மறுத்தார்.

அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.            


ஏனெனில் எப்படியும் அது, அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும்.


ஏன் எனக் கேட்டேன்.அவங்க கொடுத்திட்டாங்க.. 

" யாரு " 

 திரும்பி, பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார். நிச்சயமாய் நான் கொடுத்ததை போல, அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.

பணம் கண்டு பேராசை படாத அவரின் உண்மையும், 

உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது... 

மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன். " பேரென்னங்க ஐயா " "முருகேசனுங்க " 


" ஊருல என்ன வேல "

" விவசாயமுங்க "


" எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க "


" நாலு வருசமா செய்றேங்க "


" ஏன் விவசாயத்த விட்டீங்க "


மெல்ல மௌனமானார். 


தொண்டை 

அடைத்த துக்கத்தை,                          

மெல்ல மெல்ல முழுங்கினார். 


கம்மிய குரலோட பேச துவங்கினார். 


ஆனால், 

என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும், 


அவரின் முழு கவனமும், சாலையில் 

செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே

இருந்தது.


" எனக்கு திருநெல்வேலி பக்கம் கிராமமுங்க, 


ஒரு பொண்ணு, 

ஒரு பையன், விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு. 


ஆனா,

மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார். 


நானும் முடிஞ்சவரை கடன,

உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், 


ஒண்ணுமே விளங்கலே, 


கடைசிவரை

கடவுளும் கண்ணே தொறக்கலை.


இதுக்கு மேல தாளாதுன்னு, 


இருக்கிற நிலத்த வித்து, 

கடனெல்லாம் அடைச்சுட்டு, 


மிச்ச மீதிய வச்சு, ஒரு வழியா

பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணினேன்.


பையன் இருக்கானே, 

அவனைப் படிக்க வைக்கணுமே, 


அதுக்காக, 

நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இங்கே வந்து வேலைக்கு  சேர்ந்தேன். 


மூணு வேளை சாப்பாடு. 

தங்க இடம், 

மாசம் 7500/- ரூபா சம்பளம். 


இந்த வேலைய பாத்துகிட்டே,

பையனை என்ஜினியருக்கு படிக்க வைச்சேன். 


படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், 

பையன் கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான்.


அப்படியா, 

உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர். 


சரி,

அதான் பையன் வேலைக்கு போறான்ல, 


நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே,


நிச்சயமா

போவேன் சார், 


பையனே 

"நீ கஷ்டப்

பட்டது போதும்ப்பா, 

வந்துடு, 

எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு" தான் சொல்லுறான், 


ஆனா,

இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு, 


அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் "


" எப்போ "


" இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும் 

சார் "


" சரி, 

கடவுள் இருக்கார் பெரியவரே, 


இனி எல்லாமே நல்லதாவே 

நடக்கும் ".


பெரியவர் 

சிரித்தார். 


நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, 


ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, அவரிடம் காதில் ஏதோ சொன்னான், 


பெரியவர் முகம் மலர்ந்தார். 


" கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக்

காங்க" என்றார்.


"என்ன 

சொன்னீங்க சார். 


கடவுளா !!!


கடவுள் என்ன சார் கடவுளு, 


அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைகாரன் சார். 


இல்லன்னா, 

ஊருக்கே சோறு போட்ட என்னைய, 

கடனாளியாக்கி 


இப்பிடி நடு ரோட்டுல நின்னு, 


சாப்பிட 

வாங்கன்னு 

கூப்பிட வைப்பானா,


" மனுஷங்க 

தான் 

ஸார் கடவுள் "

 

முகம் தெரியாத, என்னை நம்பி இந்த வேலையை தந்து, 


நான் வேலைகாரன் தானேன்னு கூட பாக்காம, 


இதோ இந்த  வயசானவனுக்கு கால்

வலிக்கும்ன்னு உட்காற சொல்ற, 

என் முதலாளி ஒரு கடவுள், 


"உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப்

படனும், 

பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு, 


கூழோ, 

கஞ்சோ இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்னு " சொன்ன, 

எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற, 

என் மாப்பிள்ளை ஒரு கடவுள்.


கஷ்டப் பட்டு 

அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம, 


" நீ வேலைக்கு போவாதப்பா,

எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன

 என் புள்ள 

ஒரு கடவுள்


நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத,

எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு கடவுள். 


இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சி

அப்பப்ப ஆதரவா பேசுற, 

உங்களை மாதிரியே இங்கே வர்ற, ஆளுங்க எல்லாருமே தான் சார் கடவுள். 


" மனுசங்க தான் 

சார் கடவுள் "


எனக்கு அந்த பெரியவரை அப்படியே கட்டி அணைக்கவே

தோன்றியது, 


இருக பற்றி அணைத்துக் கொண்டேன்.


வேண்டாமென மறுத்த போதும், 


பாக்கெட்டில் பல வந்தமாய் 

பணம் திணித்தேன். 


பஸ் கிளம்பும் 

போது, 

மெல்ல புன்னகைத்த, 


முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து,


தலை வணங்கியே, கும்பிட்டேன்.


ஒவ்வொரு வீட்டுக்குமே,

இது போன்ற தகப்பன் சாமிகள்,

நிறைய பேர் இருக்கத்தான்

செய்கிறார்கள். 


நமக்குத்

தான் எப்போதுமே

கும்பிடவோ, நினைத்துப் பார்க்கவோ மனம் வருவதே இல்லை,


 🙏🏻💓உறவுகளுக்கு🌹🙌🌹 வணக்கம்.

Saturday, April 2, 2016

கனவன் மனைவி

இது ஒரு கனவன் மனைவிக்கு இடையில் நடந்த சோகம் நிறைந்த கதை !!!

ஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்.வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்வேகமாக நடக்கத் தொடங்கினர்.திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார்.கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான்மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.மழைச்சாரலோடு கும்மிருட்டும்சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு, மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ளபாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தால்.இருட்டில் எதுவும் தெரியவில்லை.மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில்

நின்றுகொண்டிருப்பதுதெரிந்தது.தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள்., கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.அவளுக்கு அழுகையாய் வந்தது...

இப்படிபயந்து அழைக்கிறேன்.என்ன மனிதர் இவர்?? திரும்பி கூட பார்க்கவில்லையே... என, மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தைகடந்தாள்.பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தைகடந்துவிட்டாள்.கணவரை கோபத்தோடுபார்க்கிறாள்.அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தகயிற்றுப்பாலத்தை தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்....

அதை பார்த்த அவள், கண்களில் கண்ணீர் வடிய கணவரை கட்டியணைத்தாள்!!!சில சமயம் கணவர் குடும்பத்திற்குஎதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாகதோன்றும்.

ஆனால்,.உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருப்பார்.தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போலஇருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்...

.வாழ்க்கை ஒரு விசித்திரமானவிந்தை.தூரத்தில் இருப்பது தெளிவாகதெரிந்தாலும், அருகில்வரும்போது மட்டுமேபொருள் புரிகிறது!!!உண்மையான அன்போடும்,நிலையான நம்பிக்கையோடும்வாழ்க்கையை நடத்துங்கள்

Friday, October 30, 2015

கோபத்தின் கதை

கோபத்தின் கதை! ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான் மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான். ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். ”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”. முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான். உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குனிந்தான். பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும். யாராயினும் நா காக்க

Tuesday, October 27, 2015

இரண்டு ரயில் தண்டவாளம்

🚋🚃இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.👶👧

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....

.உண்மை தான் என்றோம்

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
Fault makers are majority,  they get protected in most situations.

ரயிலில் கிடைத்த ....

"ரயிலில் கிடைத்த பாடம்..."
ஒரு உண்மை சம்பவம்.

கன்னியாகுமரி முதல் மும்பை செல்லும் அதிவிரைவு புகைவண்டி...

இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில், குப்பை பொறுக்கும் ஆள் போன்று, கையில் ஒரு கோனிப்பையுடன் ஒருவர் பெட்டிக்கு வெளியே, பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து பயணிக்க...

சந்தேகத்துடன்,
“என்னங்க! பக்கத்து நிலையத்தில இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன்..."

“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல?”

“இல்ல சார், அங்க இருந்தா நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று டிக்கெட்டை காட்டினார்.

"என்ன தொழில் பண்றீங்க?”

அவரது தொழிலை பற்றி விளாவாரியாக சொல்ல சொல்ல நான் பிரமித்துப் போனேன்...

அவர் சொன்னதின் சுருக்கம்...

'அண்ணன் ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார்...

வேலை என்னவென்றால்...

கன்னியாகுமரியில் ரயிலில் ஏறி, முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும், வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும்.

முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள், எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள்.

இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது...

அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம் (ரூ.4,000)...

எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம் (ரூ.32,000)...

மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் (ரூ.2,40,000)...

செலவு நாப்பதாயிரம் (ரூ.40,000))...

மாதவருமானம் இரண்டு லட்சம் (ரூ.2,00,000)...

வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் (ரூ.24,00,000)...

இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும், இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன...' என்றார்.

நான் மலைத்து நின்றேன்...

கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான்,  ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன்.

ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து, கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார்...

அன்று நான் இருந்த ஏ சி பெட்டி, கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது.

எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம்...

அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்...

மேற்படி பதிவு உணர்த்தும் நீதிகள்...

ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.

மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்...

Wednesday, May 7, 2014

என்னதான் வேலை பார்ப்பீங்க ? நியாயமான ஒரு கேள்வி


நியாயமான ஒரு கேள்வி

“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?” –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

Tuesday, March 25, 2014

நம்பிக்கை


இரவு நேரம். ஒருவன் மலைப் பாதையின் ஓரத்தில்


நடந்து போய்க் கொண்டு இருந்தான். திடீர் என
கால் சறுக்கிக் கீழே விழுந்தான். ஒரு மரக்
கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.

“”கடவுளே என்னைக் காப்பாற்று”

கடவுள் சொன்னார்: “”மரத்தின் கிளையிலிருந்து
உன் கைகளை விட்டுவிடு”

அவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை வரவில்லை.
இரவு முழுக்க மரக்கிளையில் தொங்கிக்
கொண்டிருந்தான், கடுமையான கை வலியையும்
தாங்கிக் கொண்டு.

விடிந்தது.

கீழே- பார்த்தான்.

தரை ஓர் அடி தூரத்தில் இருந்தது.!!??


Saturday, February 15, 2014

பென்சில்:



Thursday, February 13, 2014

அன்புக்கு” எதுவுமே தெரியாது “அன்பைத் தவிர

என் நண்பனின் காதல் கதையை அப்படியே பதிவு பண்ணியிருக்கேன். என் அத்தை பொண்ணைதான் கட்டிக்கணும்னு சின்ன வயசிலேயே முடிவு பண்ணிட்டாங்க. அவளுக்கு என் மேல விருப்பம். ஆனா எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. 

எல்லாருக்கு அந்தந்த வயசில காதல் வரும். அது போலத் தான் எனக்கும் காலேஜ் படிக்கும்போது வந்தது. 

நான் ரொம்ப பணக்காரன். ஹேண்ட்சம் வேற. படிச்சது கோ - எஜூகேஷன். நான் ரெண்டாவருஷம். லவ்வர் முதல் வருஷம். வெவ்வேற மேஜர். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில அவளைப் பார்த்த உடனே, ஒரு ஸ்பார்க் கிடைச்சது. அதிலேர்ந்து அவ நினைப்பு. ஆரம்பத்தில அவளுக்கு இவன் லவ் பண்றது தெரியலை. கொஞ்ச நாள் கழிச்சு தெரியவந்த போது, ஏத்துக்கலை. அவன் கேட்டானாம், ஜாதி,பைசா தான் ப்ரச்சனையா உனக்கு. அதுக்கு அவள்,நீயும் நானும் வேற ஜாதிதான். மிடில்க்ளாஸ் நான். இது எல்லாத்துக்கும் மேல எனக்கு, உன்கிட்ட லவ் வரணும். எதுவும் வரலைன்னு க்ளியரா சொன்னா. 

ஆனா நீ தான் எனக்கு மனைவியா வரணும்னு அன்பா சொன்னேன். அதுக்கப்புறம், காலேஜ் ஃபுல்லா எல்லார்கிட்டேயும் லவ்வ சொன்னேன். அவளை டார்சர் பண்ணேன். எல்லாத்துக்கும் மேல ரொம்ப ரொம்ப பொறுமையா இருந்தா.என் காலேஜ், கடைசி வருஷம் கடைசிநாள் அன்னைக்கு என்கிட்ட பேசணும்னு சொன்னா. நான் 4 ஃப்ரண்ட்ஸ்கூட சந்தோஷமா இருந்தேன். அவ மட்டும் தனியா வந்தா. நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னு கேட்பேன்.செய்வையா? நான் சொன்னேன், என் உயிரைகேட்டாலும் கொடுப்பேன். உடனே ஒரு ப்ராமிஸ் மட்டும் கேட்டா. எனக்காக உயிரைக் கொடுக்கறேன்னு சொல்ற, போய் உன்னை விரும்பற பொண்ணுக்கு வாழ்க்கைக் கொடு. அவளோட குடும்பம்,குழந்தைன்னு சந்தோஷமா இருன்னா.

எனக்கு கோபம் வந்து அவளை தகாத சொற்களால “சாபம்” மிட்டேன்.

அப்புறம் அத்தைப் பெண்ணோட திருமணம் ஆச்சு. என் மனைவிகிட்ட என்காதல் விஷயத்தை சொன்னேன்., அப்போ உன்னைய நல்லா சந்தோஷமா வெச்சுக்கறேன். ஆனா என் மனசுல அவ மட்டும் தான். என் மனைவி புரிஞ்சுகிட்டா. இதுக்கு இடையில என் மனைவி, லவ்வரை திருமணத்திற்கு முன்னரே மீட் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கா. அதுக்கு யாரோ சொல்றதை வெச்சு என்னைய பார்க்க வந்திருக்கீங்க.எனக்கு துளி கூட காதல் இல்லை. கண்டிப்பா நீங்க அவரோட வாழ்வீங்கன்னு சொன்னாளாம்.

எங்களுக்கு ஒரு பையன்,ஒரு பெண். மனைவி சம்மதத்துடன் என் பெண்ணுக்கு லவ்வர் பெயரை வெச்சேன். குடும்பத்தோட எதிர்பாரத இடத்தில 7 வருஷம் கழிச்சு சந்திச்சேன். லவ்வர் மட்டும் வந்திருந்தா. திருமணம் ஆகி இன்னும் கூடுதல் அழகோட இருந்தா. என் மனைவிகிட்ட சொன்னேன். அவ கூட கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வர்ரேன்னு. நாங்க ரெண்டு பேரும் பொதுப் பேச்சுகள் பேசினோம்.

உணமையிலேயே, என் லவ்வர்க்கு எல்லாத் திறமையிருந்தும், அவ எல்லார்கிட்டேயும் காட்டின அன்பு யாராலையும் கொடுக்கமுடியாது. நான் கோபத்தில சொன்ன வார்த்தைகள் அவ வாழ்க்கையில பலிச்சிருச்சு. ஆனா அவ எதையும் பெரிசா எடுத்துக்காம அதே நட்போட சிரிச்சா. 

அவ சொன்னா, அன்புங்கறது எப்போ யார்கிட்ட வரும்னு தெரியாது. கல்யாணம் ஆனவங்க,ஆகாதவங்க கணக்கில்லை... உனக்கு என் அன்பு கிடைக்கலை, அதனால உன் வலியை சாபமா மாத்தின. நான் அந்த வலியை வரமா ஏத்துக்கிட்டேன். வாழ்க்கையில எதுக்கும் “காரணம்” “காரியம்” தேடாத. வர்றதை அக்செப்ட் பண்ணிக்கோ. முடியாத குழந்தைகளை படிக்கவை. எல்லாருக்கும் உதவியா இரு. எனக்கு அது தான் சந்தோஷம்னு சொன்னா. 
அட்ரஸ் கேட்டபோது, என் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கேன்னு அனாவசியமா ப்ரச்சனை வரவேணாம், சொல்லிட்டு, போய்ட்டா. 

அவன் சொன்னான், இன்றுவரை என் மனசில அவதான் இருக்கா. அவ நட்பு போல என் அன்பும் பவித்ரமானது. அதைவிட விதி வலியது என்ன பண்றது.

”அன்புக்கு” எதுவுமே தெரியாது “அன்பைத் தவிர” 

Yes Love Is Unconditional!!!!!


https://www.facebook.com/subhasri.sriram/posts/554623751300749

உண்மையைச் சொல்ல முடிந்தால்..

வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்..

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

*

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

*

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

*

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

*

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!

*

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

*

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

*

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

*

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

மாத்தி யோசிங்க

ஊரில் ஒரு அரசன். அவனுக்கு ஒரு கண்ணும் ஒரு காலும்
குறைபாடுடன் இருந்ததாம்.

அந்த ஊரில் இருந்த கலைஞர்களை கூப்பிட்டு தன்னை ஒரு
அழகான சித்திரத்தில் வடிக்க சொன்னானாம் அரசன்.

ஒருவரும் முன் வரவில்லை. குறைபாடுடன் இருக்கும் ஒருவனை
எப்படி அழகாக காட்ட முடியும் என்று தயங்கினார்கள்.

ஆனால் ஒரு கலைஞன் மட்டும் முன் வந்து தான் வரைவதாக
கூறி, ஒப்புக்கொண்டதோடு இல்லாமல், அதி அற்புதமாக வரைந்தும்
காட்டினானாம் . எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்.

அவன் வரைந்ததை பார்த்தபோது, ஒரு வேட்டைக்கான இலக்கை
நோக்கி, ஒரு கண்ணை மூடிக்கொண்டும், ஒரு காலை மடித்துக்
கொண்டும் இருப்பது போல் வரைந்திருந்தானாம்.

சின்ன கதை தான் என்றாலும் நம் கண்களை திறக்கிறது அல்லவா ?

மாத்தி யோசிங்க…வாழ்க்கையில் வெல்லுங்கள்..!

காணாமல் போனவர்

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

< படித்ததில் பிடித்தது >

Wednesday, January 15, 2014

முஜே மாலும் நஹி


ஒரு வெளிநாட்டுகாரர் இந்தியா வந்தார். 
தாஜ்மகாலை பார்த்து அதிசயப்பட்டு பக்கத்தில் இருந்த ஒரு ஹிந்திகாரரிடம் இதை யார் கட்டியது என்று கேட்டார். அந்த ஹிந்திகாரர் "எனக்கு

Sunday, February 3, 2013

பட்டத்து யானை


அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும்
சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன்,
தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த
குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத தைப்் போற்றிப் புகழ்ந்தனர். கதை முடிஞ்சுச்சு

Monday, January 28, 2013

தெளிவுக் கதை

ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில்
இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப்
போவது?

இந்த நேரத்தில்
ஒரு காளை மாடு அங்கே வந்தது.