Wednesday, April 6, 2016

ஒரு பள்ளிக்கூடம்

ஒரு பள்ளிக்கூடம்.

ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார்.

மாணவர்கள் எழுந்து நிற்கிறார் கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.

3 & 6 & 12

இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார்.

‘‘மாணவர்களே... இதன் தீர்வு...’’

அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான்.

‘‘ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!’’

‘‘இல்லை!’’ என்கிறார் ஆசிரியர்.

அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள்.

‘‘ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!’’

‘‘இல்லை... இல்லை!’’
மாணவர்கள் விழிக்கிறார்கள்.

இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.

‘‘மாணவர்களே... நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.’’

தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.

‘‘இப்போது மறுபடியும் முயல்வோம்...’’ என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்:

22 58 33 55.

உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.

‘‘சார், இதன் தீர்வு என்ன?’’

ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘‘இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!’’

மாணவர்கள் அமைதியானார்கள்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.
‘‘மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை:

கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

இரண்டாவது அறிவுரை:

ரிலாக்ஸாக இருங்கள்.

நண்பர்களே!

இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும்தான்.

இன்றைய மனிதன் கற்பனையான பிரச்னை களிலேயே அதிகம் கலங்கிப் போகிறான். அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.

விளைவு?

ஆலயங்களை நாடிச் சென்று ஆண்டவனிடம் முறையிடுகிறான்.

பக்தர்களே!

உங்களுக்கு பகவான் சொல்ல விரும்புகிற அறிவுரையும் இதுதான்:

1. கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

2. ரிலாக்ஸாக இருங்கள்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதை.

Monday, April 4, 2016

புகழ்பெற்ற கல்லறை வாசகங்க

புகழ்பெற்ற கல்லறை வாசகங்களாக யாரோ எழுதியதை இன்று படித்தேன் ... மிகவும் பொருத்தமாகவே இருந்தது ..

புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை ..." சப்தமிட்டு நடக்காதீர்கள், இங்கே தான் என் அருமைத் தாயார் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள் ",

உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம் ," உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது . நல்ல வேளை இவள் பிணமானாள் , இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும் ".

மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள் , " இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது " ..

ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம் , "இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான் " ....

அரசியல்வாதியின் கல்லறையில் , " தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள் , இவன் எழுந்து விடக்கூடாது ".

ஒரு விலை மகளின் கல்லறை வாசகம் , " இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள் ,தொந்தரவு செய்யாதீர்கள் , பாவம் இனி வர முடியாது இவளால் "....

இவ்வளவு தானா வாழ்க்கை ??? ஆம் அதிலென்ன சந்தேகம் ?? ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல் .... உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான் .

அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள் .....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் , ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை .....

நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம் ?? காலம் நம்மை எத்தனை நாள் விட்டு வைக்கும் ??

நமது பதவியா ??

நாம் சேர்த்த சொத்து சுகங்களா ?

நமது படிப்பா ??

நமது வீடா ??

நம் முன்னோர்களின் ஆஸ்தியா ??

நமது அறிவா ??

நமது பிள்ளைகளா ???

எது நம்மைக் காப்பாற்றப் போகிறது ???

ரத்தம் சுருங்கி , நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை ...

பசித்தவனுக்கு உணவு கொடுத்து , உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து , எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள் .

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும் .

ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம் ....நல்ல செயல்களை , எண்ணங்களை விதைப்போம் ....

அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக ....

பிறரை வாழ வைத்து வாழ்வோம்.

Saturday, April 2, 2016

கனவன் மனைவி

இது ஒரு கனவன் மனைவிக்கு இடையில் நடந்த சோகம் நிறைந்த கதை !!!

ஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்.வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்வேகமாக நடக்கத் தொடங்கினர்.திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார்.கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான்மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.மழைச்சாரலோடு கும்மிருட்டும்சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு, மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ளபாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தால்.இருட்டில் எதுவும் தெரியவில்லை.மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில்

நின்றுகொண்டிருப்பதுதெரிந்தது.தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள்., கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.அவளுக்கு அழுகையாய் வந்தது...

இப்படிபயந்து அழைக்கிறேன்.என்ன மனிதர் இவர்?? திரும்பி கூட பார்க்கவில்லையே... என, மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தைகடந்தாள்.பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தைகடந்துவிட்டாள்.கணவரை கோபத்தோடுபார்க்கிறாள்.அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தகயிற்றுப்பாலத்தை தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்....

அதை பார்த்த அவள், கண்களில் கண்ணீர் வடிய கணவரை கட்டியணைத்தாள்!!!சில சமயம் கணவர் குடும்பத்திற்குஎதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாகதோன்றும்.

ஆனால்,.உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருப்பார்.தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போலஇருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்...

.வாழ்க்கை ஒரு விசித்திரமானவிந்தை.தூரத்தில் இருப்பது தெளிவாகதெரிந்தாலும், அருகில்வரும்போது மட்டுமேபொருள் புரிகிறது!!!உண்மையான அன்போடும்,நிலையான நம்பிக்கையோடும்வாழ்க்கையை நடத்துங்கள்