Wednesday, March 9, 2011

"எனது வெற்றிக்கு தாத்தாதான் காரணம்!'

 http://img.dinamalar.com/data/large/large_201878.jpg
"எனது வெற்றிக்கு தாத்தாதான் காரணம்!' கார்டூனிஸ்ட் பாலா: எனது பூர்வீகம் நெல்லை. நான் பிறந்தது, வளர்ந்தது ஆரம்ப கல்வியை முடித்தது மும்பையில்தான். தாத்தா பொன்னையாவுக்கு உதவியாக நெல்லை வந்தேன். அவர் ரொம்ப வித்தியாசமான பர்சனாலிட்டி. அவர் மேற்பார்வையில்
வளர்ந்தேன். காமிக்ஸ் கதையில் வரும் மாயாவி, டெவில் பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். வெள்ளை காகிதத்தை தலையில் தடவினால், அதில் எண்ணெய் படிந்து, செமி டிரேஸ் பேப்பர் ஆகிடும். அதை அப்படியே படத்தின் மேல் வைத்து காப்பி பண்ணுவேன். அச்சு அசலா படம் பிரதி எடுத்த மாதிரி வந்துடும்; எனக்கு சந்தோஷம் பிடிபடாது. ஓவியம் பற்றிய எந்த பார்வையும் இல்லாத என் குடும்பத்திலிருந்து இப்படித்தான் என் ஓவிய பயிற்சி துவங்கியது. ஓவிய ஆர்வம், எங்கள் வீட்டு சுவரில் கிறுக்கல்களாக வெளிப்படும். முதன் முதலில் நான் பங்கேற்ற ஓவியப் போட்டியில் தோற்றுப் போனேன். அந்த வருத்தம் எனக்கு இருந்தது. அன்று இரவு எனக்கு தூக்கமில்லை. அடுத்த ஆண்டு எப்படியும் முதல் பரிசை வாங்கி ஹீரோ போல் வலம் வர வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. தாத்தா சொல்படி, நரியும், சிங்கமும் பேசிக் கொள்வது போன்ற படத்தை வரைந்தேன். அதுதான் எனக்கு கார்டூனுக்கான முதல் வித்து. அதன்பின், பள்ளியில் நான் படிக்கும் வரை, அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசு எனக்குத்தான். நம் நாட்டில், பத்திரிகைகளில், அரசியல் கார்டூன் வரைய ஆட்கள் குறைவு என்பதை அறிந்து, அந்த பணியில் இறங்கினேன். நண்பர்கள் பாலபாரதி, மதியழகன் சுப்பையா, பிரபல கார்டூனிஸ்ட் மதன், மதி ஆகியோரின் உதவியும் கிடைத்தது. மிகப் பெரும் பத்திரிகை ஒன்றில், 24 வயதிலேயே கார்டூனிஸ்டாகி விட்டேன். கார்டூனிஸ்ட் உதயனின், "ஆங்' என்ற கார்டூன் தொகுப்புதான் எனக்குள் ஒரு லட்சியத்தை ஏற்படுத்தியது. அது முதல், எப்போதும் எனது கோடுகள், உலகம் முழுக்க ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களுக்காக பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்!

1 comment:

  1. On this, recent commentaries within the field of ‘Internet addiction’ solid doubt on the latter, arguing that the addictiveness of the Internet as a medium is conceptually unsound . However, it has been speculated that in some cases, the use of of} the Internet would possibly moderate the relationship between the individual and a doubtlessly addictive behaviour (Starcevic & Aboujaoude, 2017). Since he stopped gambling in May, Jason has noticed with contemporary eyes just how prevalent the gambling trade has turn out to be. Nationally, entire sports shows second are|are actually} devoted 까모벳 to gambling, and others don’t go lengthy with out mentioning an thrilling potential parlay bet.

    ReplyDelete