Friday, March 11, 2011

"நடனம் எனக்கு கிடைத்த தூண்!'

http://img.dinamalar.com/data/large/large_203235.jpg
"நடனம் எனக்கு கிடைத்த தூண்!' நடன உலகில் சர்வதேச அளவில் பல மேடைகளைக் கண்ட, சிகாகோவில் வாழும் இந்தியரான மாற்றுத் திறனாளி சுடிக்ஷ்னா: எங்கம்மா, அமெரிக்கா, சிகாகோ நகரத்துல, "பரதம்'னு நாட்டிய ஸ்கூல் நடத்திட்டிருக்காங்க. அப்பா, மிருதங்க வித்வான். தங்கை, 6ம் வகுப்பு படிக்கிறாள். நான், பிளஸ் 1 படிக்கிறேன். பிறவியிலேயே எனக்கு,
மணிக்கட்டுக்குக் கீழ் வலது கையும், முட்டிக்கு கீழ் வலது காலும் இல்லை. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து, பாட்டு, நடனம் தான் எனக்கு தாலாட்டு. நாலு வயசுல, "நானும் சலங்கை கட்டிக்கறேம்மா'ன்னு சொல்லி, பரதம் கத்துக்க ஆரம்பிச்சேன். ரெண்டு வருடத்துக்கு முன்ன அரங்கேற்றம் பண்ணினப்ப, அம்மாவுக்கும், எனக்கும் ஆனந்தமா இருந்துச்சு. சிகாகோ இண்டியன் கான்சலேட், கோவில் விழாக்கள், மேடை நிகழ்ச்சிகள்னு நிறைய புரோகிராம் பண்ணியிருக்கேன். பாட்டுலயும், மேடைகளில் கச்சேரி பண்ற அளவுக்கு உயர்ந்துட்டேன். எத்தனையோ சர்வதேச அரங்குகளை பார்த்துட்டாலும், நாட்டிய மேதைகளும், முன்னணி கலைஞர்களும், கலை ரசிகர்களும் கூடற சென்னையில கச்சேரி பண்றது, தேவலோகத்துக்கே வந்திட்டு போற மாதிரி இருக்கு. என்னை முதன் முதல்ல பார்க்கறவங்களுக்கு, "ஐயோ பாவம் இந்த பொண்ணு'னு பரிதாப உணர்வு தோணலாம். ஆனா, நார்மலா உள்ளவங்களை விட, நான் எந்த விதத்திலும் குறைவில்லைனு அவங்களுக்கு உணர்த்தணும்னு தவிப்பேன். அதுக்கு எனக்கு கிடைச்ச தூண் தான் பரதம். என்னைப் பார்த்து பரிதாபம் காட்டறவங்களைக் காட்டிலும், என்னால அச்சீவ் பண்ண முடிஞ்சிருக்குங்கறது, எனக்கு நிறைவா இருக்கு. அதனால, அதையும் ஒரு தலைமைப் பண்பாகத்தான் பார்க்கறேன். இது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் தாரக மந்திரம்.

No comments:

Post a Comment