Friday, March 18, 2011

"நம்பிக்கை வீண் போகவில்லை!'

http://img.dinamalar.com/data/large/large_207538.jpg
"நம்பிக்கை வீண் போகவில்லை!' கார்மென்ட்ஸ் தொழிலில் அசத்தும் லோகநாயகி: தஞ்சாவூர் தான் சொந்த ஊர். அப்பா, டூவீலர் மெக்கானிக். உடன் பிறந்தவர்கள், ஒரு அண்ணன், ஒரு தங்கை. பத்திரிகையாளர் ஆக வேண்டும்
என்பது தான் என் ஆசை. ஆனால், என் அப்பாவால், என்னை பிளஸ் 2விற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. நானும், சூழ்நிலையை புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தேன். அப்பாவின், திடீர் மரணம், எங்களை நிலைகுலைய வைத்தது. நாங்கள் அனைவரும் சிறு பிள்ளைகள் என்பதால், தவிச்சுப் போயிட்டோம். இருந்தாலும், குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு போய், குடும்பத்தை சிரமப்பட்டு காப்பாற்றினார் என் அண்ணன். ஆண்களின் பாரத்தை குறைக்க, பெண்களும், ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், கஷ்டத்துடன், கஷ்டமாக, எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். என் அண்ணன், தம்பிகளுடன் சேர்ந்து, கரூரில், கூல் டிரிங்க்ஸ் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தார் என் கணவர். குடும்பம் ஒற்றுமையாக இருந்தாலும், ஐந்து குடும்பங்களுக்கும், கூல் டிரிங்க்ஸ் கம்பெனியின் வருமானம் போதுமானதாக இல்லை. வேறு ஏதாவது தொழில் துவங்கலாம் என, நாங்க மட்டும் பாபநாசத்திற்கு வந்துவிட்டோம். பி.சி.ஓ., காயின் பாக்ஸ் ஏஜன்சி எடுத்ததில் ஏகப்பட்ட நஷ்டம். அப்போது தான், கார்மென்ட்ஸ் தொழில் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். பாபநாசத்தில், இந்த தொழில் சாத்தியப்படாது என, பலர் அறிவுரை கூறினர். ஆனால், குடும்பத்தைப் பிரிந்து, வெளி ஊர்களில் வேலை பார்ப்பதால், ஊழியர்களால் மனம் ஒன்றி வேலை பார்க்க முடிவதில்லை. அதனால், பாபநாசத்திலேயே கார்மென்ட்ஸ் கம்பெனி துவங்கினால், நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. கம்பெனி துவங்கி, இரண்டரை வருடமாகிறது. இப்ப, 18 பேருக்கு வேலை கொடுக்கிறோம். மாதம் 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது. இதில் இன்னும் உச்சத்தை தொட வேண்டும் என்பது தான் என் லட்சியம்.

No comments:

Post a Comment