Wednesday, March 30, 2011

http://img.dinamalar.com/data/large/large_215062.jpg
"வேலையை காதலுடன்செய்கிறேன்!' அமெரிக்க கடற்படை போர்க் கப்பலின் கமாண்டர் சாந்தி சேத்தி: அம்மா, அப்பாவின் பூர்வீகம் டில்லி. உறவினர்களைப் பார்க்க, சிறு வயதில் டில்லி சென்றிருந்தாலும்,
தென்னிந்தியாவிற்கு சமீபத்தில் வந்திருக்கிறேன். அமைதியாகவும், அழகாகவும் இருந்தது.அமெரிக்க கடற்படையில், மொத்தம் 280 கமாண்டர்கள் உள்ளனர். எட்டு பேர் பெண்கள். அதில், நானும் ஒருத்தி. இது தான் லட்சியம் என்று நினைத்து கப்பற்படையில் சேரவில்லை. ஆனால், கிடைத்த வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.நாளாக ஆக, நடுக்கடலில் பார்க்கும் சூரிய உதயம், நடுநிசி நட்சத்திரங்கள், ஆழ்கடல் அமைதி என ஒவ்வொன்றும், மிகவும் பிடித்துப் போனது. கடந்த செப்டம்பரில், அமெரிக்காவில் இருந்து கிளம்பினோம். மே மாதம் தான் மீண்டும் போய்ச் சேருவோம். ஊர் போய்ச் சேரும் வரை பயணம், வித்தியாசமான மக்கள், மாறுபட்ட சூழ்நிலை என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம். வேலையை காதலுடன் செய்யாவிட்டால், ஆழ்கடலின் அமைதி, மயான அமைதியாகத் தான் இருக்கும்.ஏவுகணைகள், பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் என, மிதக்கும் ஆயுதக் கிடங்கு தான், நாங்கள் பயணிக்கும் இந்தக் கப்பல். ஆனால், அதிலிருப்பவர்களைப் பார்த்தால், எந்தப் பதற்றமும் இருக்காது. போர்க் கப்பல் என்றால், சண்டையில் உயிர்களைப் பறிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கெல்லாம் பாதுகாப்பும், அரசியல் ஸ்திரத் தன்மையும் தேவைப்படுகிதோ, அங்கெல்லாம் போய், எங்கள் வருகையைப் பதிவு செய்கிறோம்.

No comments:

Post a Comment