Tuesday, March 22, 2011

திறந்த மனதுடன் செல்லுங்கள்

http://img.dinamalar.com/data/large/large_209999.jpg
திறந்த மனதுடன் செல்லுங்கள்: கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் 36வது இடம் பெற்ற சண்முகப்பிரியா: ஐ.ஏ.எஸ்., எழுத்து தேர்வு முடிந்த பின், நேர்முகத் தேர்வு முக்கியமான ஒன்று. நேர்முகத் தேர்வுக்கு
செல்லப்போகிறோம் என்ற பதட்டம் இல்லாமல், எப்போதும் போல சகஜமாக இருங்கள். அப்போது தான், நீங்கள் நடுவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, மனதில் தோன்றிய பதிலை சரியாகச் சொல்ல முடியும். நேர்முகத் தேர்வில், முதலில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும், நம்மை சகஜ நிலைக்கு கொண்டு வரும் கேள்விகள் தான். "எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள், உங்கள் பெயரின் காரணம் என்ன' போன்ற கேள்விகள் ஆரம்பத்தில் கேட்கப்படும். கேட்கப்படுபவை சாதாரணக் கேள்விகள் போல் இருந்தாலும், நம் பதில் எடுத்துக்காட்டுடனும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். உங்கள் பதில், சாதகமான முறையில் இருக்க வேண்டும் அல்லது பாதகமான பதில்களைச் சொல்லி, பிரச்னைக்கான தீர்வையும் சொல்வது போல் இருந்தால், கேள்வி கேட்பவர்கள் மகிழ்ச்சி அடைவர். நேர்முகத் தேர்வுக்கு செல்பவர், தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், தமிழகத்தில் தற்போது இருக்கும் பிரச்னைகள், இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழகத்தில் பருவ நிலை மாற்றம், அரசியல் மாற்றம் குறித்த கேள்விகளும் இடம் பெறலாம். நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன், கடந்த ஒரு மாதத்தில் வெளியான செய்தித்தாள்களில், அதிகம் இடம் பெற்ற, முக்கிய தேசியப் பிரச்னைகள் குறித்து, முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும். இரவு, 8.30 மணிக்கு மேல், ரேடியோவில், தேசிய பிரச்னைகள் குறித்து, முக்கிய நபர்கள் பங்கேற்கும் விவாதம் ஒலிபரப்பாகும். இதைத் தொடர்ந்து கேட்டால், நேர்முகத் தேர்வு மிகவும் எளிதாக இருக்கும். கூடிய வரை, தெரிந்த விஷயத்தை, மற்றவர்களுக்கு புரியும் படி சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். தெரியாத விஷயங்களுக்கு, மழுப்பலாக பதில் அளிப்பதை விடுத்து, திறந்த மனதுடன் தெரியாது என ஒப்புக் கொள்ளுங்கள்.
இவற்றை பின்பற்றினால், நேர்முகத் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.

No comments:

Post a Comment