Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, January 31, 2012

தினம் ஒரு 'கப்' தக்காளி சூப் – கிடைக்குமே 'சூப்பர் எபெக்ட்'!


Fertilityஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காதல் வந்தால் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கும்–விஞ்ஞான உண்மை


Loversலட்சம் பூக்கள் பூத்ததைப்போல உணர்வுகள் தோன்றுகிறாதா? வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறதா? அப்படீன்னா, வடிவேலு சொல்றதைப் போல, உங்களுக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்கின்றனர் விஞ்ஞானிகள்.
 
காதல் என்பது காதலர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்தினாலும் காதல் உணர்வுகளை வலி நிவாரணியைப் போல வேலை செய்யும் என்றும், போதைப் பொருளுக்கு சமமானது என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். 

Thursday, September 8, 2011

நம் காதல்...

நான்  கை  குலுக்கி

வாழ்த்து  சொன்னபோது

களங்கப்பட்டுப்போய்

இருக்குமோ? 

© ம. ரமேஷ் கவிதைகள்
-----------------------------

நான் கை குலுக்கி
வாழ்த்து சொன்னபோது
களங்கப்பட்டுப்போய்

இருக்குமோ?
நம் காதல்.
 
© ம. ரமேஷ் கவிதைகள்
---------------------------------------
நண்பர்களாக

இருப்போம் என்கிறாய்!

என்னால்

முடியவில்லை.

இன்றும் -

காதலோடுதான்
பேசிப் பழகுகிறேன்.

© ம. ரமேஷ் கவிதைகள் 
-------------------------------------------

காதலுக்குக் கண்ணில்லை! கண்ணீர் உண்டு!!*
--------------------------------------------------

நீ   என்னை

நண்பர்களிடமிருந்து மட்டுமல்ல

இறைவனிடத்திலிருந்தும்
தனிமைப்படுத்திவிட்டாய்

© ம. ரமேஷ் கவிதைகள் 
-------------------------------

Saturday, July 17, 2010

தார் சாலையின் தூரத்து வெளிச்சமென..


-ரிஷிசேது

கருத்த இரவின் நீண்டுகொண்டே போகும் 
தார் சாலையின் தூரத்து வெளிச்சமென நீ
நம்பிக்கையை இரைத்துக்கொண்டே போகிறாய்

வெறுமை நிரம்பிக்கிடக்கும் என் இதயத்தில்
நீ ஒருகொத்து ரோஜா மலர்களை வீசிவிடுகிறாய்
அவை ஒவ்வொரு இதழாய் பிரிந்து நரம்புகளெங்கும் பரவி
மூளையை எட்டும்போது நீ அங்கில்லை
நானும் காதலும் தவித்துக்கிடக்கிறோம்

நீ என் வாழ்வு விடியும் வரை காத்திருக்கத்
தயார் என்றாலும் என் இரவுகள் 
நீண்டுகொண்டே போவதின் நிஜம்
உனக்கு பயமூட்டலாம் 
நான் லட்சியப்பறவை என் வானம்
மேகங்களில்லாதது- நீ வானவில்லை எதிர்பார்கிறாய்

மெளனம் நீளும் நம் சந்திப்புகள் முடியும்போது
சாதிப்பதற்கு சில வார்த்தைகளை வீசிப்போகிறாய்
பணம் தின்னிக்கழுகுகள் சுற்றமும் நட்புமாக இருப்பின்
எதுசெய்தால் எது கிடைக்கும்
தொடர் ஓட்டம் காதல், காதலை விழுங்கும்....


rishi_sethu23@rediffmail.com