Thursday, March 31, 2011

"பிரமிக்க வைத்த குழந்தைகள்!'

http://img.dinamalar.com/data/large/large_215742.jpg
"பிரமிக்க வைத்த குழந்தைகள்!'சாலையோர ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தும் வெளிநாட்டு பெண் இவனா: என் சொந்த நாடு செர்பியா. கடந்த ஆறு வருடங்களாக, பல நாடுகளுக்கு பயணம் செய்து சமூக சேவை செய்து வருகிறேன்.
மூன்று மாதங்களுக்கு முன், இலங்கை மக்களுக்கு சேவை செய்து வந்தேன். அப்போது, அங்கு நடந்த சமூக சேவகர்கள் மாநாட்டில் தான், சென்னையை சேர்ந்த, இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரனை சந்தித்தேன். அதன் பின் தான், சென்னை வந்து, சமூக சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது.நான் சென்னையை சுற்றிப் பார்த்த போது, சாலையோரத்தில் வசிப்பவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல், படிப்பில் ஆர்வம் அதிகம் உள்ள குழந்தைகளுக்கு கல்வி புகட்டலாம் என்று நினைத்தேன். உடனே, ஏற்கனவே உள்ள அனுபவத்தின் அடிப்படையில், ஆங்கிலம் எடுக்க துவங்கிவிட்டேன்.பல நாடுகளுக்கு பயணப்பட்டிருந்தாலும், இங்குள்ளவர்களின் அன்பும், சகோதர மனப்பான்மையும் மிகவும் பிடித்துள்ளது. மேலும், ஆங்கிலத்தை வேகமாகவும், ஆர்வமாகவும் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். இரண்டே மாதத்தில், ஆங்கில கிராமரை கற்றுக் கொண்டு விட்டனர். இப்போது இந்த குழந்தைகள் நிறங்கள், பழங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் சொல்கின்றனர். இந்த குழந்தைகளின் ஆர்வத்தையும், கற்றுக் கொள்ளும் வேகத்தையும் பார்க்கும்போது, எனக்கு பிரமிப்பாக உள்ளது.இன்னும் ஒரு மாத காலம் தான் நான் இங்கு இருப்பேன். அதன்பின், இங்குள்ளவர்கள், இந்த பணியை தொடர வேண்டும்.

No comments:

Post a Comment