- தோற்பது சுகம்
என் இனியத் தந்தையின்
வாதத்தில்
தோற்பது சுகம்
என் இனியத் தாயின்
கண்டிப்பில்
தோற்பது சுகம்
என் இனிய ஆசானின்
அறிவில்
தோற்பது சுகம்
என் இனிய நண்பனின்
விவாதத்தில்
தோற்பது சுகம்
என் இனிய மனைவியின்
ஊடலில்
தோற்பது சுகம்
என் இனிய மழலையின்
விளையாட்டில்
- என்றும் அன்புடன்
- சா.கி.நடராஜன்.
No comments:
Post a Comment