Tuesday, July 27, 2010

மாணவர்கள் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல

சென்னை : ""மாணவர்கள் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல,'' என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சமுதாய விழிப்புணர்வு அமைப்பான, சுடர் வம்சத்தின் 5ம் ஆண்டு விழா சென்னை எழும்பூர், "இக்சா' மையத்தில் நேற்று நடந்தது. இந்த அமைப்பு, கடந்த 5 ஆண்டுகளாக சமுதாய மற்றும் தனி மனித வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.மாணவர்களிடம் நாட்டுப்பற்று, மனிதநேய உணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பேசியதாவது:கடந்த 5 ஆண்டுகள் சமுதாய விழிப்புணர்வு பணியில், மற்ற அமைப்புகளிலிருந்து மாறுபட்டு சிறப்பாக "சுடர்வம்சம்' செயல்படுகிறது. கல்வி தான் மாணவர்களின் சொத்து. பொருளாதார ரீதியில் மாணவர்கள் பின்தங்கியிருந்தாலும், லட்சியங்களை அடைவதில் பின் தங்கிவிடக் கூடாது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடை கிடையாது. கல்வி இல்லையென்றால் தாய், தந்தை கூட மதிக்க மாட்டார்கள்.இவ்வாறு கல்வியாளர்கள் தெரிவித்தனர்.மாணவ, மாணவியர் 71 பேருக்கு "சுடர்வம்சம்' சார்பில் கல்வி ஊக்கத் தொகைக்கான காசோலை மற்றும் புத்தகங்களை கல்வியாளர் ரமேஷ் பிரபா வழங்கினார்.கல்வியாளர் ரமேஷ் பிரபா, கவிஞர் பிறைசூடன் மற்றும் காவல் துறை முன்னாள் உதவி ஆணையர் பிரபாகர் ஆகியோருக்கு சுடர்வம்சம் சார்பில், தொழிலதிபர் சீனா தானா விருதுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், சுடர்வம்சம் அமைப்பின் நிறுவனர் ரகுராஜ், ஆலோசகர் சந்திரன் சாமி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment