Sunday, July 4, 2010
சொந்தமாக தொழில் துவங்க பயிற்சி: நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியர் வேல்முருகன்: தோட்டக்கலை சம்பந்தமாக தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தில் கண்டறியப்பட்ட உயர் தொழில்நுட்பங்களை நகர்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில் கற்றுக் கொடுக்கிறோம். தாவரவியல் பூங்காக்களை அமைத்தல், அலங்காரத் தோட்டங்களை உருவாக்குதல், அலங்காரச் செடிகள் வளர்த்தல், மாடியில் தோட்டம் அமைத்தல், போன்சாய் மரம் வளர்ப்பு என பல உபயோகமான விஷயங்களை கற்றுக் கொடுக்கிறோம். வீட்டில் உள்ள பெண்களும், வேலைக்குச் செல்லும் பெண்களும் ஆர்வமுடன் கற்றுக் கொள்கின்றனர். மேலும், தோட்டங்களை உருவாக்குவதற்குத் தேவையான காய்கறி விதைகள், பல தாவரங்களின் விதைகள் ஆகியவை இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விதைகள் அனைத்தும் வேளாண் பல்கலைக் கழகத்திலேயே உருவாக்கப்பட்டவை. தோட்டக்கலை மற்றுமல்ல, மீன் மசாலா, சிக்கன் மசாலா, மிளகாய் பொடி உள்ளிட்ட ஏராளமான சமையல் மசாலா பொடி வகைகளைத் தயாரிப்பதற்கான பயிற்சிகளும் அளிக்கிறோம். மூலிகை செடி விதைகளை எப்படி வளர்ப்பது, அதை வைத்து சமையல் செய்வது உள்ளிட்டவைகளையும் கற்றுக் கொடுக்கிறோம். இல்லத்தரசிகளும் மட்டுமின்றி, வர்த்தக நோக்கில் கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கும் இங்கு பயிற்சி தரப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற பலர் சொந்தமாக பல சிறு தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். ஒவ்வொரு பயிற்சியும் தனித்தனியாக, தனித்தனி நாட்களில் அளிக்கப்படுகிறது. மதிய உணவிற்கும் சேர்த்து 400 ரூபாயை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
நிறைய கண்டுபிடிப்பேன்! சிறையில் மொபைல் நடமாட்டத்தை அறிய மொபைல் டிடெக்டர் கருவியை கண்டுபிடித்த மோகன்: கரூரில் தனியார் பாலிடெக்னிக்கில் இ.சி.இ., மூன்றாமாண்டு படிக்கிறேன். எங்கள் குடும்பம் சாதாரண நடுத்தர குடும்பம். சிறுவயது முதலே ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதே ஆர்வத்துடனும், விடாமுயற்சியுடனும் நான் கண்டுபிடித்தது தான் மொபைல் டிடெக்டர் சாதனம். இது பொதுவாக தனி நபரின் கட்டுப் பாட்டிற்குள் இருக்கும். இதனால், சிறைச்சாலை போன்ற இடங்களில் ஏமாற்றுதல் எளிதாகிவிடுகிறது. நான் கண்டறிந்துள்ள நேவல் மொபைல் டிடெக்டர் சாதனத்தில் ஜி.எஸ்.எம்., சிம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதால் மொபைல் போனைக் கண்டறிந்தவுடன் ஐந்து நபர்களுக்கு அதைப் பற்றிய தகவல் போய்ச் சேர்ந்து விடும். இதன் மூலம் சிறைச்சாலை போன்ற இடங்களில் கடைநிலை ஊழியர் ஏமாற்றினால் கூட குறுந்தகவல் பெறும் ஏதாவது ஓர் அதிகாரி நடவடிக்கை எடுக்க முடியும். பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட இடங்களில் சிம் கார்டு இல்லாமல் வீடியோ, புகைப்படம் எடுக்க மொபைல் போனை எடுத்துச் சென்றாலும் என் கண்டுபிடிப்புக் கருவி அவர்களை காட்டிக் கொடுத்து விடும். மூலிகை மூலம் கொசுக்களை விரட்டும் என் கண்டுபிடிப்பிற்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் கடந்த 2008ம் ஆண்டிற்கான எல்.ராம்ப் விருதை பெற்றேன். ஸ்பீடு பிரேக்கர் ஜெனரேட்டர் என்ற கருவி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று நான் நிரூபித்துள்ளேன். தற்போது, ஜன்னல் கண்ணாடிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி, பள்ளி வாகன ஓட்டுனர்கள் மொபைல் போனை உபயோகித்தால் வாகனம் தன்னிச்சையாக வேகம் குறைந்துநின்று விடும் கருவி ஆகியவை ஆய்வில் உள்ளன. என் சாதனைகளை, கரூர் மாவட்ட கலெக்டர் பல வகைகளில் ஊக்கப்படுத்துகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
very good inventions....
ReplyDeletereally you are great...
pls continue the same...
and achieve more and more
thanks
babu
contactbabu@yahoo.com