தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் !
அவசர வாழ்க்கையினூடே
எப்பொழுதோ தொலைந்துப்போன
புன்னகையின் அழுகுரல்
எங்கேனும் செவியெட்டித்
தொலைக்கின்றன !
பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ ,
முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ
வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில்
மறைந்துபோகும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.!
அழைப்பேசியின்
எதிர்பாராத அழைப்புகள் .,
முடிய மறுக்கும்
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்கள் .,
உறவுகளின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
மீண்டும் அவளின் நினைவுகளை
என் இதயத்தில் தள்ளி
தாழிட்டு செல்கின்றது.!
ஒருவேளை
நான் இறந்து போகும்போது
அவளை
மறந்துபோகலாம் !!!
No comments:
Post a Comment