Tuesday, October 27, 2015

ரயிலில் கிடைத்த ....

"ரயிலில் கிடைத்த பாடம்..."
ஒரு உண்மை சம்பவம்.

கன்னியாகுமரி முதல் மும்பை செல்லும் அதிவிரைவு புகைவண்டி...

இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில், குப்பை பொறுக்கும் ஆள் போன்று, கையில் ஒரு கோனிப்பையுடன் ஒருவர் பெட்டிக்கு வெளியே, பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து பயணிக்க...

சந்தேகத்துடன்,
“என்னங்க! பக்கத்து நிலையத்தில இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன்..."

“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல?”

“இல்ல சார், அங்க இருந்தா நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று டிக்கெட்டை காட்டினார்.

"என்ன தொழில் பண்றீங்க?”

அவரது தொழிலை பற்றி விளாவாரியாக சொல்ல சொல்ல நான் பிரமித்துப் போனேன்...

அவர் சொன்னதின் சுருக்கம்...

'அண்ணன் ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார்...

வேலை என்னவென்றால்...

கன்னியாகுமரியில் ரயிலில் ஏறி, முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும், வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும்.

முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள், எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள்.

இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது...

அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம் (ரூ.4,000)...

எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம் (ரூ.32,000)...

மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் (ரூ.2,40,000)...

செலவு நாப்பதாயிரம் (ரூ.40,000))...

மாதவருமானம் இரண்டு லட்சம் (ரூ.2,00,000)...

வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் (ரூ.24,00,000)...

இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும், இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன...' என்றார்.

நான் மலைத்து நின்றேன்...

கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான்,  ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன்.

ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து, கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார்...

அன்று நான் இருந்த ஏ சி பெட்டி, கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது.

எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம்...

அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்...

மேற்படி பதிவு உணர்த்தும் நீதிகள்...

ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.

மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்...

Wednesday, May 14, 2014

முட்டை ஓட்ஸ் ஆம்லெட்

முட்டை ஓட்ஸ் ஆம்லெட்
காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நினைத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள். அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் இந்த ரெசிபியை காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு இந்த மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும்.

 இது சற்று வித்தியாசமானதாக இருந்தாலும், மிகவும் சுவையுடன் இருக்கும். இப்போது அந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

 தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
 முட்டையின் வெள்ளைக்கரு - 4
மிளகுத் தூள் - 1/2
 டீஸ்பூன் பால் - 1/2
கப் ஆலிவ்
ஆயில் - 1 டீஸ்பூன்
 உலர்ந்த கற்பூரவள்ளி - 1/2
 டீஸ்பூன்
துருவிய
சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
 கொத்தமல்லி -
சிறிது உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்க வேண்டும். பின் அதில் ஓட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டூம்.

பின்னர் அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடேற்றி, பின் அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஆம்லெட் போன்று ஊற்றி, அதன் மேல் உலர்ந்த கற்பூரவள்ளி, சிறிது சீஸ் மற்றும் கொத்தமல்லியை தூவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால்,

முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெடி!!!

Wednesday, May 7, 2014

என்னதான் வேலை பார்ப்பீங்க ? நியாயமான ஒரு கேள்வி


நியாயமான ஒரு கேள்வி

“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?” –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

அசல் தேன் எது? கலப்பட தேன் எது?



அசல் தேன் எது? கலப்பட தேன் எது? என்பதை எளிமையான முறையில் கண்டறியலாம்.


1) ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள், அந்த தேனை,
தேன் ஊற்ற‍ப்பட்ட‍ காகிதம் உறிஞ்சாம லும் மேற்கொண்டு அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்ப...தை அறியலாம்.
ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்ல‍து பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்

Tuesday, May 6, 2014

வலது காலை எடுத்து வைத்து வா

கேஎஃப்சி (KFC) சிக்கனை பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம் !!


கேஎஃப்சி (KFC) சிக்கனை தேடி கடைக்கு செல்ல வேண்டாம்பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம் !!
பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம். இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.
சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:

ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா!