Saturday, January 16, 2021

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.

 அவர் இறந்து விட்டார் 

அடக்கம் செய்யணும்

சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!! 

.

மெல்ல எட்டிப் பார்த்தேன் 

மூச்சு இல்லை – ஆனால் 

இப்போதுதான் இறந்திருந்தார் 

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!  

.

இருபது வருடங்கள் 

முன்னாடி – அவர் மனைவி 

இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!! 

என்று யாரும் கேட்காத 

நேரத்தில் – அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

பொண்டாட்டி போனதுமே

போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று

காதுபட மருமகள் பேசியபோது 

அவர் இறந்திருந்தார் அப்போதும் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

தாய்க்குப் பின் தாரம் 

தாரத்துக்குப் பின் ..

வீட்டின் ஓரம் ...!!! 

என்று வாழ்ந்த போது – அவர் 

இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை ..!!!

.

காசு இங்கே 

மரத்திலேயா காய்க்குது - என்று 

மகன் அமிலவார்த்தையை 

வீசிய போது..!!! 

அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!

.

என்னங்க...!!! 

ரொம்ப தூரத்திலே இருக்குற 

முதியோர் இல்லத்திலே விட்டு 

தலை முழுகிட்டு வந்திடுங்க...!!! 

என்று காதிலே விழுந்த போதும் 

அவர் இறந்திருந்தார் 

யாருமே கவனிக்க வில்லை...!!! 

.


உனக்கென்னப்பா...!!!

பொண்டாட்டி தொல்லை இல்லை 

என்று வாழ்த்துவது போல 

கிண்டலடிக்கப் பட்ட போது 

அவர் இறந்திருந்தார்..!!!

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

.

இப்போதுதான்

இறந்தாராம் என்கிறார்கள்..!!!

எப்படி நான் நம்புவது..???

நீங்கள் செல்லும் வழியில் 

இப்படி யாராவது

இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஒரு வினாடியாவது நின்று

பேசி விட்டுச் செல்லுங்கள்..!!! 

.

இல்லையேல்...!!!! 

.

உங்கள் அருகிலேயே 

இறந்து கொண்டிருப்பார்கள் 

புரிந்து கொள்ளுங்கள் ..

.

வாழ்க்கை என்பது 

வாழ்வது மட்டுமல்ல..!!! 

வாழ வைப்பதும்தான் ..!!!!


😥😥😥😭😭😭😭😭😭


பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.


வி.ச.செம்மேனிநாதன்

நீங்கள்ஒட்டுக்கேட்கப்படுகிறீர்கள் 🦻

 புதிய வாட்ஸ்அப் சட்டத்தை பார்த்து பலர் வாட்சப்பில் இருந்து வெளியேறி வருகிறார்கள். உண்மையில் இது புதிதல்ல, இதுவரை சொல்லாமல் செய்ததை இப்போது சொல்லிவிட்டு செய்கிறார்கள்.. அவ்வளவே..

.

#நீங்கள்ஒட்டுக்கேட்கப்படுகிறீர்கள் 🦻

ஆம் நம்பவில்லையா இதோ நான் கூறும் வழிமுறையில் அதனை சோதித்துப் பாருங்கள்..

.

#ஆய்வுமுறை1

நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு ''டிஜிட்டல் கேமரா'' மாடலை பற்றி வாட்ஸ் அப்பில் எழுத்து வடிவில் விவாதியுங்கள்.. சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்.. அந்த கேமரா மாடல் விளம்பரம் வரும்.

.

#ஆய்வுமுறை2

நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு குறிப்பிட்ட மொபைல் மாடலை பற்றி தொலைபேசியில் குரல் வழியாக விவாதியுங்கள்.. சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்.. அந்த மொபைல் மாடல் விளம்பரம் வரும்...

.

#ஆய்வுமுறை3

நீங்கள் ஒரு பெரும் வணிக கடைக்கு முன்பு சிறிது நேரம் நில்லுங்கள்.. உதாரணத்திற்கு பிக் பஜார் போன்ற கடைகளில் நில்லுங்கள்.. சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்.. அந்த கடையின் விளம்பரம் வரும்...

.

#ஆய்வுமுறை4

உங்கள் கணினியில் ஒரு பொருளை தேடுங்கள்.‌. உதாரணத்திற்கு கைகடிகாரம்.. சிறிது நேரம் கழித்து நீங்கள் உங்கள் கைப்பேசி முகப்புத்தகம் போனால்.. அந்த கைகடிகாரம் விளம்பரம் வரும்... அதாவது கணினியில் தேடியது கைபேசியில் வரும்

.

#ஆய்வுமுறை5

இதுதான் உச்சகட்டம்... உங்கள் கைப்பேசியை லாக் செய்து மேசையில் வைத்து விடுங்கள்.. நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு மேசையில் அமர்ந்து ஒரு குறிப்பிட்ட பொருளை உதாரணத்திற்கு வாகனம் பற்றி பேசுங்கள்.. சிறிது நேரம் கழித்து நீங்கள் உங்கள் கைப்பேசி முகப்புத்தகம் போனால்.. அந்த வாகன விளம்பரம் வரும்...

.

#ஆய்வுமுறை6

இது இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறது.. சோதனையில் பெரிய அளவு வெற்றி காண இயலாது.. இருந்தாலும் முயலுங்கள்.. கையில் கைபேசியை கேமரா எதிரில் நிற்பவரை பார்க்கும்படி வைத்து அவர்களிடம் முதல்முறை பேசுவது போன்று பேசுங்கள்.. அவர் உங்கள் நட்பு வட்டத்தில் இல்லாமலிருந்தால்.. சிறிது நேரத்தில் ரெகமெண்டெட் நண்பர்கள் என்ற தலைப்பில் முகப்புத்தகத்தில் அவர் பெயரை படத்தை உங்களுக்கு முகப்புத்தகம் பரிந்துரைக்கும்...

.

அது எப்படி ஒட்டுக்கேட்கும் என்று நீங்கள் நினைக்கலாம், உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் அலெக்சா இருக்கிறது என்றால், அதனை நீங்கள் அலெக்சா என்று அழைத்தவுடன், உங்களிடம் பேசத் தொடங்கும். ஆனால் அதுவரை உங்களோட அனைத்து வார்த்தைகளிலும் ''அலெக்சா'' என்ற வார்த்தை இருக்கிறதா, இல்லையா என்பதை பகுப்பாய்வு செய்து கொண்டே இருக்கும்..

.

ஆக உங்களின் எழுத்து கண்காணிக்கப்படுகிறது.. உங்களின் தொலைபேசி உரையாடல் கண்காணிக்கப்படுகிறது.. தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் செல்லும் இடங்கள் கண்காணிக்கப்படுகிறது.. தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் பேசும் வார்த்தைகள்.. தொலைபேசியில் இருக்கும் கேமரா என அனைத்தும் உங்கள் அனுமதியின்றி உங்களை வியாபாரப் பொருளாக்கி கொண்டிருக்கிறது

.

இதனை செய்வது எந்த ஒரு தனிநபரும் அல்ல.. Ai கணினி நுண்ணறிவு என்று சொல்லப்படும் ''ஆர்டிபிசியல் இன்டல்லைஜன்ஸ்''.. வியாபார நோக்கில் செய்யும் தகவல் பகுப்பாய்வு..

.

இதற்கும் நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசியின் தயாரிப்பாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

.

உதாரணத்திற்கு ஆப்பிள் தொலைபேசியாக இருந்தாலும் அண்ட்ராய்டு தொலைபேசியாக இருந்தாலும் இது இப்படித்தான் செயல்படும்

காரணம் இது நீங்கள் பயன்படுத்தும் செயலிக்கு கொடுக்கும் உரிமை.. நீ எனது கைப்பேசியின் கேமராவை பயன்படுத்திக்கொள்ளலாம் எனது கான்டக்ட் பட்டியலை பயன்படுத்திக்கொள்ளலாம் என் கைபேசி மைக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யும் போது நாம் கொடுக்கும் அனைத்து உரிமை தான் இதற்கு அடிப்படை..

.

நீங்கள் உரிமை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்கள் தகவலை நவீன உலகம் திருடும் என்பதை மறக்க வேண்டாம்.

.

இறைவனுக்கு மனிதன் அஞ்சி இருந்தான் காரணம் அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நம்பி இருந்ததால் இப்போது அந்த உருவத்தில் கணினி நுண்ணறிவு நம்மை சூழ்ந்து இருக்கிறது.. இறைவன் காப்பவன் என்றால் இது நம்மை வணிக உலகத்துக்கு இரையாக்கும் ஓர் பொறி.

டாக்டர்களின் எதிரி யார்??????

 டாக்டர்களின் எதிரி யார்??????

#நிலக்கடலை தான்...


சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!!


#நிலக்கடலைசர்க்கரையைகொல்லும்..!!


நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.


 நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.


நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.


★ நீரழிவு நோயை தடுக்கும்:


நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.


★ பித்தப் பை கல்லைக் கரைக்கும்:


நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.


★ இதயம் காக்கும்:


நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.


★ இளமையை பராமரிக்கும்


இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.


★ ஞாபக சக்தி அதிகரிக்கும்:


நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.


★ மன அழுத்தம் போக்கும்:


நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.


★ கொழுப்பை குறைக்கும்:


தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. 


நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.


இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


★ அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:


உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.


 எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.


கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.


★ கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:


பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.


*நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.

நார்சத்து- 9 மி.கி.

கரையும் கொழுப்பு – 40 மி.கி.

புரதம்- 25 மி.கி.

ட்ரிப்டோபான்- 0.24 கி.

திரியோனின் – 0.85 கி

ஐசோலூசின் – 0.85 மி.கி.

லூசின் – 1.625 மி.கி.

லைசின் – 0.901 கி

குலுட்டாமிக் ஆசிட்- 5 கி

கிளைசின்- 1.512 கி

விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி

கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.

காப்பர் – 11.44 மி.கி.

இரும்புச்சத்து – 4.58 மி.கி.

மெக்னீசியம் – 168.00 மி.கி.

மேங்கனீஸ் – 1.934 மி.கி.

பாஸ்பரஸ் – 376.00 மி.கி.

பொட்டாசியம் – 705.00 மி.கி.

சோடியம் – 18.00 மி.கி.

துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.

தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*


★ பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:


நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.


 நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

.

பகிருங்கள் பலரும் தெரிந்துகொள்ளட்டும்... கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்...


எளிதாக கிடைப்பதனை அடுத்தவருக்கு சத்தான கடலையை தானம் கொடுக்கிறோம் ஏன்???

Friday, January 15, 2021

அன்னமும் பாலும்

 அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். 


ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், 


அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

  

நான் சில மிருகக் காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். 


அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.

  

எனக்கு ஒரு குழப்பம். 

நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. 


சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன்.


ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, அன்னம் என்பதற்கு அரிசிசாதம் என்றும் ஒரு பொருள் உண்டே. இதை நாம் 

சிந்திக்கவில்லையே என்று யோசித்தேன்.


பிறகு கொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, 


அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். 


அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, 


என்ன ஆச்சரியம்..!! 

 பால் முழுவதையும் சாதம் உறிஞ்சிக் கொண்டிருந்தது. 


தெளிந்த நீர் மட்டும் சாதத்தைச் சுற்றியிருந்த இடத்தில் வடிந்திருந்தது.


 உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது. 


சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன்.

  

இதுதான் அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் கதை. 


நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.

  

மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, அன்னம் என்று தான் சொன்னார்களே தவிர, அன்னப்பறவை என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை.

அது நாமாக செய்து கொண்ட கற்பனைதான் என்று புலனாயிற்று.


அன்னம் பாலையும் தண்ணீரையும் இப்படித்தான் பிரிக்கும் என தெரிந்து கொண்டேன்.


படித்ததில் உணர்ந்தது....


🙏

ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.

 ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும்  Close.

👇👇👇👇👇👇

படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு


1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி. 


மாட்டுவண்டி எங்க தாத்தா ???


மாடு இல்லையே பா..!! 


2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.


ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?


மாடு இல்லையே பா..!! 


3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது. 


மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?


மாடு இல்லையே பா..!! 


4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.


மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant  என்ன ஆயிற்று ? 


மாடு இல்லையே பா..!! 


5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே - 


மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??


மாடு இல்லையே பா..!! 


*********


உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது என்று  திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் பசுவதை கூடங்கள் (cow slaughter houses) அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) -  பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன.  


விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான். இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்.. 


சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?


காளை மாடு இல்லையே பா..!! 


*********

ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.


அனைவரும்  சிந்திக்கவே இந்த பதிவு....  விழிப்போம் உயர்வோம்....👍🏼

Monday, January 4, 2021

இன்றே! மீட்டெடுப்போம்! வாருங்கள்

 உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???

தயவு செய்து

வேர்க்கடலை,

பேரீச்சம்பழம்  தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!

கீரை  வாரம் 3 முறை பருப்புக்கூட்டாகவும்,

ராகியை சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்  இருமுறை கொடுக்கவும்!

ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!

தினமும் சாப்பிடக்கொடுங்கள்!

உங்கள்  மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???

தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!

தினமும்  5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!

கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட  வலியுறுத்துங்கள்!

உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்???

🚪தயவு செய்து  பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!

🍅🥕🥒🍆🌰🥔  ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்!

🥃 சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!

 நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ! அன்றே  நாம் நோய்யின் பிடியில் சிக்கிக் கொண்டோம்.

இழந்த ஆரோக்கியத்தைமுழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ் கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.

இன்றே!மீட்டெடுப்போம்! வாருங்கள்!

Wednesday, December 9, 2020

புளிய மரங்கள் சாலை ஓரத்தில் வளர்வதன் பிண்ணனி தெரியுமா உங்களுக்கு?, புளி மருத்துவம்

 புளிய மரங்கள் சாலை ஓரத்தில் வளர்வதன் பிண்ணனி தெரியுமா உங்களுக்கு?, புளி மருத்துவம்


பண்டைய காலங்களில், இன்று போல நிமிடத்திற்கொரு பேருந்து வசதிகள் இல்லை, அருகில் இருக்கும் ஊருக்கு செல்வதனாலும் சரி, தொலைதூர ஊர்களுக்கு செல்வதானாலும் பெரும்பான்மை மக்கள் எல்லோரும் கால்நடையாகத்தான் செல்வார்கள், அந்த சமயங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்த களைப்பு நீங்கி, சற்று ஓய்வெடுத்து செல்ல, அவர்களுக்கெல்லாம் இக்கால சாலையோர சிறு மோட்டல்கள் போல அக்காலத்தில் அமைந்தவைதான், நிழல் தரும் புளிய மரங்கள். பகலில் புளிய மரங்கள் வெளியிடும் ஆக்சிஜன் காற்று களைப்படைந்தவர்களை, புத்துணர்வூட்டி, நடையைத் தொய்வின்றித் தொடர வைக்கும்.
அக்காலங்களில், ஆண்மீகக் கருத்துகளை சொல்லும்போது, உலக விஷயங்களில், 'புளியம் பழமும் ஓடும் போல இருங்கள்!' என்று குறிப்பிடுவார்கள், நன்கு பழுத்த புளியம் பழத்தின் சதை, அதன் ஓட்டில் ஒட்டாது விலகியே இருக்கும், அதுபோல, மனிதர்கள் உலகில் மக்களோடு கலந்து வாழ்ந்தாலும், உலக விசயங்களில் பற்றுக்களை விலக்கி வாழ்ந்து, நற்கதி அடையவேண்டும் என்பதே, இந்த சொலவடையின் பொருள்.

பாதசாரிகளுக்கு உதவும் வண்ணம் அக்கால ஆட்சியாளர்கள், சாலையோரங்களில் எல்லாம் நிழல் தரும் புளிய மரங்களை நட்டு வளர்த்தனர். இந்த காலத்தில் அதுபோல யாரும் நடப்பது இல்லையாகையால், வாகனங்களில் செல்வோர் தாக சாந்தி செய்ய, சாலையோரங்களில், தண்ணீர் கடைகளை (!?) திறந்து வைத்து, குடிமக்கள் திருப்தியடைய வழி வகைகள் செய்திருக்கின்றனர்.
புளிய மரம், மனிதருக்கு நிழல்கள் மட்டும் தருவதில்லை, தமிழர் உணவில் சுவைக்காகவும், உடல் நலத்திற்காகவும், சேர்க்கப்படும் ஒரு முக்கிய பொருளாகவும் திகழ்கின்றன.
எண்பது அடிகள் வரை உயர்ந்து வளரும் புளிய மரங்கள், நூறாண்டுகள் வரை வாழும் தன்மை மிக்கவை, செடியாக நட்டு வளர்ப்பதன் மூலம் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளில், காய்க்கத் தொடங்கிவிடும், வெப்ப மண்டல மரமான புளியமரத்திற்கு ஓரளவு வளர்ந்தபின் தண்ணீர் தேவையில்லை, வேறு எந்த பூச்சிகள் தொல்லையுமில்லை ஆயினும், குளிர் பிரதேசத்தில் மட்டும் இவை வளராது.

புளிய மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள், பழத்தின் கொட்டைகள், பட்டைகள் அதன் பிசின்கள் என அனைத்தும் பலன் தரக்கூடியவை. அதன் மரம் உறுதிமிக்க மரச்சாமான்கள் செய்ய பயனாகின்றன.
புளிய இலையின் பயன்கள்
சித்த மருத்துவத்தில், புளிய இலை சிறந்த வலி நிவாரணியாக கூறப்படுகிறது.
வலி நிவாரணி :
உடலில் கை மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கங்கள் குறைய, புளிய இலைகளை சூட்டில் வதக்கி ஒரு துணியில் வைத்து, அவ்விடங்களில் ஒத்தடம் கொடுத்து, அதன்பின் வீக்கங்களின் மேல் வதக்கிய புளிய இலைகளை கட்டிவரலாம்.
கால்களில் , கைகளில் தண்ணீர் படும் இடங்களில் உள்ள காயங்கள் எளிதில் ஆறாது, அந்தக் காயங்களை ஆற்ற, புளிய இலைகள், வேப்பிலைகள் இரண்டையும் நீரில் கொதிக்க விட்டு, அந்த நீரை காயங்களின் மேல் நன்கு ஊற்றி சுத்தம் செய்ய, அவை விரைவில் ஆறி தழும்பு விட்டுவிடும்.
ரத்தம் சுத்தமாக :
மலேரியா போன்ற கொசுக்களால் ஏற்படும் விஷ சுரங்கள் விலக, புளிய இலைகளை நன்கு காய்ச்சி, பனை வெல்லம் சேர்த்து பருகிவர, காய்ச்சல்களின் வீரியம் குறையும், இரத்தம் சுத்தமாகும்.
வயிற்றுப் பூச்சிகளுக்கு :
காபிக்கு டிகாக்சன் தயார் செய்யும்போது, சிறிது புளிய இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை ஊற்றி டிகாக்சன் செய்ய, காயங்களை ஆற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும், இந்த டிகாக்சனில் காபி பருக, குழந்தைகளின் வயிற்று பூச்சிகள் அழிந்து, குழந்தைகள் நன்கு பசியெடுத்து சாப்பிடுவர்.
கொழுந்தான புளிய இலைகளை வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிட, உடல் வலுவாகும்.
கண் பாதிப்பு குறைய :
புளிய இலைகளைப்போல, அதன் பூக்களும் நலம் தருபவை, புளியம் பூவை துவையலாக செய்து சாப்பிட, தலைச்சுற்றல் மயக்கம் சரியாகும். கண் சிவப்பு மறைய, புளியம் பூக்களை அரைத்து கண்களைச் சுற்றி பற்று போட்டுவர வேண்டும்.
புளியம் பழம் :
சத்துக்கள் :
நன்கு பழுத்து சதைப் பற்றுடன், சற்றே இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுள்ள புளியம் காய்களே, வெயிலில் நன்கு காயவைத்தபின், சமையலில் நாம் உபயோகிக்கும் புளியாக கிடைக்கிறது. புளியில் வைட்டமின், கால்சியம், இரும்பு மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
புளியம் பழத்தின் நன்மைகள் :
புளியின் பொதுவான மருத்துவ குணங்கள், மலச் சிக்கலை சரிசெய்யும், உடல் சூட்டை சீர்செய்து, கண் எரிச்சலை போக்கி, உடலை நலமாக்கும். சமையலில் இன்றியமையாத ஒரு பொருளாக, புளி விளங்குகிறது. புளி சேர்க்காத சாம்பார், குழம்பு, மற்றும் இரசம் என்பது, தமிழகத்தில் வெகு அரிதான ஒன்று.
வாய்ப்புண் குணமாக :
தேள் கொட்டிய விஷம் இறங்க, வலி போக, புளியை சுண்ணாம்பு கலந்து, கடித்த இடத்தில் இட வேண்டும். வாய்ப் புண்கள் குணமாக, புளி கலந்த நீரில் அவ்வப்போது, வாயை கொப்புளித்து வரலாம்.
அளவுக்கு மீறி மது அருந்தியவர்கள் சிலர், அதிக ஆவேசப்பட்டு, சுற்றியுள்ளவர்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள், மீதி சிலர், மது போதை தலைக்கேறி, தன்னிலை மறந்து மயங்கிக் கிடப்பர், இந்த மோசமான நிலையிலிருந்து இவர்களைத் தெளிய வைக்க, புளியை கரைத்து அந்த நீரை பருக வைக்க, இயல்பு நிலைக்கு திரும்புவர். புளியால் வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற பாத்திரங்கள் ஆபரணங்களை, தூய்மை செய்து, பளபளப்பாக்கலாம்,
புளியங் கொட்டை
புளியங் கொட்டையில் அரிசியில் உள்ளது போன்ற மாவுச்சத்தும், ஆல்புமின் எனும் தாதுவும் மற்றும் எண்ணைத் தன்மையும் உள்ளன. புளியங் கொட்டைகளை தூளாக்கி, பாலில் சிறிது இட்டு, பனங்கற்கண்டு கலந்து பருகிவர, உயிர்த்தாது வளமாகும்.
புரதச் சத்துக்கள் :
உடலில் புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள், புளியங் கொட்டைகளை வறுத்தோ வேக வைத்தோ உணவில் விரும்பும் வகையில் சேர்த்துவர, புரதக் குறைபாடுகள் நீங்கி, உடல் நலம் பெறலாம்.
இரவுகளில் ஏன் தூங்கக் கூடாது :
வெப்பத்தை வெளியிடும் புளியமரம் பகலில் ஆக்சிஜனை அதிக அளவில் வெளியேற்ற, அதை சுவாசிக்கும் வழிப் போக்கருக்கும் அதன் நிழலில் இளைப்பாருபவர்களுக்கும், அவை நன்மை தரும்.
அதுவே இரவில், அதிக அளவில் உடலுக்கு தீங்கு செய்யும் கார்பன் மோனாக்சைடு வாயுவை அதிகம் வெளியேற்றுவதால், இரவில் புளிய மரத்தடியில் படுத்து உறங்க, அந்த காற்று சுவாசத்தில் தடை ஏற்படுத்தி, மூச்சடைப்பை ஏற்படுத்தும்,
எனவே தான், இரவில் புளிய மரத்தடியில் உறங்க வேண்டாம், கால்நடைகளையும் இரவில், அம்மரத்தில் கட்டி வைக்க வேண்டாம் என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள். அக்காலங்களில் அறிவியல் உண்மைகளை, மக்களை பயமுறுத்தும் வண்ணமே, சொல்லி எச்சரித்தனர், அதனால் தான், அதிக படிப்பறிவில்லாத மக்களும் அதை ஏற்று நடந்து வந்தனர்.