Thursday, November 1, 2012

வருந்தாத மாக்கள்


வருந்தாத மாக்கள் :
--------------------------------


கடவுளின் அருள் பெற்று பயன் அடைந்த
கூட்டத்தை விட
கடவுளின் பெயர் சொல்லி பயன் அடைந்த
கூட்டம் அதிகம்

தியானமும் யோகாவும் விற்பனைக்கு
ஞானமும் கடவுளும் கற்பனைக்கு

பாதி நேரம் அருளுரை
மீதி நேரம் ஆணுறை
கட்டினிலே கன்னி
கையிலே கமண்டலம்

ஆசையை துறந்தவர்கள் இருந்த
பதவியிலே இன்று
ஆடையை துறந்தவன் அமர்கிறான்

திரை போட்டு காட்டியும்
திருந்தாத மக்கள் _ சிலர்
கறை பட்ட பின்பும்
வருந்தாத மாக்கள்

- வை . நடராஜன்

Wednesday, May 9, 2012

கரு நீள கூந்தல் வேண்டுமா? கையில மருந்திருக்கு!

Grow Your Hair With The Help Siddha

கார் கூந்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அழகுதான். முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சிக்காகவும் ரசாயனம் கலந்த மருந்துகள் சந்தையில் பல வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பதை விட இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

இயற்கை மருத்துவம்

ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.

நேர்வாளங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து நீரை விட்டு நன்கு அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடிவளரும்.

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் சிறிய துண்டாக நறுக்கி போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி கருப்பாக வளர

உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

ஆலமர வேர், செம்பருத்தி பூ ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

5 மில்லி தண்ணீரில், 20 கிராம் அதிமதுரத்தை அதில் போட்டு காய்ச்சி ஆறிய பின் பாலில் 15 நிமிடம் ஊறவத்து, பின் கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் தலை முடி கருமையுடன் மினுமினுப்பு பெறும்


Thursday, February 2, 2012

சுவையான செட்டிநாடு வறுத்த கோழி


Chicken Fryசெட்டிநாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது வறுத்த கோழி மிகவும் சுவையாகவும், சாப்பிட தூண்டுவதாகவும் இருக்கும். அவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். 

சத்தான இறால் தொக்கு


Iral Thokkuகடல் உணவுகளிலேயே மிகவும் சுவையானதும் அதீத நல்ல கொழுப்புச் சத்துக்களும் இறாலில் உள்ளன. மேலும், கால்சியம், புரதம், அயோடின் போன்ற சத்துக்களும் இறாலில் உள்ளதால் இதனை உண்ண மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் பி12, டி போன்றவையும், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் போன்றவையும் இறாலில் காணப்படுகின்றன. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.

ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு


Ayirai meen kulambuமீன் குழம்பு என்றாலே நினைக்கும் போதே நாவில் நீர் ஊறும். அதுவும் கிராமப் பகுதிகளில் கிடைக்கும் அயிரை மீன்களில் வைக்கப்படும் குழம்பின் ருசியே அலாதிதான். நகரங்களில் ஒரு சில உணவகங்களில் மட்டும் அயிரை மீன் குழம்பு ஸ்பெசல் அயிட்டமாக தயார் செய்யப்படுகிறது.

தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்


Dandruffகூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம்

Tuesday, January 31, 2012

கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட!

Nandita Das
சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து இன்றைய இளம் தலைமுறையினர்ஆழ்மனதில் பதிந்து போய் விடுகிறது. கொஞ்சம் கறுப்பாக இருந்தாலும் முகத்தை சிவப்பாக்க சந்தைகளில் விற்கும் எண்ணற்ற அழகுசாதன கிரீம்களை வாங்கி முகத்தில் பூசி வெள்ளையடித்துக் கொள்கின்றனர். அதெல்லாம் பணத்திற்கு வேட்டு வைக்கும் சமாச்சாரம். கறுப்பானவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என்பது அழகுக்கலை நிபுணர்கள் களின் நம்பிக்கை வார்த்தையாகும்.