Friday, October 29, 2010

அனிமேஷன் படித்தால் உடனே வேலை!

அனிமேஷன் படித்தால் உடனே வேலை! அனிமேஷன் துறையில் தொடர்ந்து சாதித்து வரும் நிஷாந்த்: அனிமேஷன் குறித்த விழிப்புணர்வு, தமிழக மாணவர்கள் மத்தியில் போதிய அளவு இல்லை. பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு எந்த அளவுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவு வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் துறை அனிமேஷன். வேலைவாய்ப்பு இருக்கும் அளவுக்கு திறமையான நபர்கள் இத்துறையில் இல்லை. வட மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழக மாணவர்கள் எண்ணிக்கை, இத்துறையில் குறைவாகவே உள்ளது. அனிமேஷன் துறைக்கு வருவதற்கு, பொறியியல் அளவுக்குப் படிக்க வேண்டியதில்லை. அனிமேஷன் படிக்க கொஞ்சம் ஆங் கில அறிவு, பிளஸ் 2 படித்திருந்தால் போதும். மேலும், "மாயா, சாப்ட் இமேஜ், பிளாஷ், எக்ஸ்.எஸ்.ஐ., 3டி மேக்ஸ்' போன்ற மென்பொருள்களில் ஏதாவது ஒன்றில் நல்ல அறிவு பெற்றிருந்தாலே, அனிமேஷன் துறையில் சாதிக்கலாம். நம் நாட்டில், கார்ட்டூன் சேனல்கள் அதிகரித்து விட்டன. கார்ட்டூன் படங்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இங்கேயே தயாரிக்கப்பட்டால், அன்னியச் செலாவணியும், வேலைவாய்ப்பும் அதிகமாகும். சிறந்த அனி மேட்டராக வேண்டுமானால், ஓரளவு ஓவியத்திறன் அவசியம். திறமையான அனிமேட்டர்கள், தொடக்க நிலையிலேயே 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். தற்போது, அண்ணா பல்கலைக் கழகத்தில் அனிமேஷன் படிக்க வாய்ப்பிருக்கிறது. சென்னையில் அனிமேஷன் படிப்பைக் கற்றுக்கொடுக்கவும், படித்து முடித்தவுடன், வேலை வாய்ப்பைத் தருவதற்கும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. வீடியோ கேம்ஸ், வெப் டிசைனிங், கட்டடக் கலை, மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளிலும், அனிமேஷனை தவிர்க்க முடியாது. "இ -லேர்னிங்' தற்போது முக்கியத்துவம் வாய்ந்த துறையாக வளர்ந்து வருகிறது. இத்துறையில் பணியாற்ற, கைதேர்ந்த அனிமேட் டர்கள் எப்போதும் தேவைப்படுகின்றனர்.

No comments:

Post a Comment