Friday, February 18, 2011

ஆசிரியர் நினைத்தால் அனைத்தையும் மாற்றலாம்!

 http://img.dinamalar.com/data/large/large_189994.jpg
ஊரை மாற்றிய டீச்சர் ராஜம் கோவிந்தராஜன்: நான் பிறந்து வளர்ந்த இடம், தஞ்சை மாவட்டம். ஊர் மிராசுதாரரா இருந்த என் அப்பாவும், நான் படிச்ச பெண்கள் கிறிஸ்டியன் மேல் நிலைப்பள்ளியும் தான் என் அடித்தளம். பத்தாம் வகுப்பு முடித்த பின், செகன்ட் கிரேடு டீச்சருக்குப் படிச்சேன். என் திருமணத்திற்குப் பின் தான், திருவாரூர் அருகில் உள்ள திருமதி குன்னத்திற்கு வந்தேன். நகரத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால், ஆரம்பத்தில், இந்த கிராமம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. மாணவர்களிடம் ஒழுக்கம், சுத்தம் எதுவும் இருக்காது. அப்பதான், ஒரு டீச்சராக, மாணவர்களின்
எதிர்காலத்தை மாற்றிக் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன். பள்ளியில், இரண்டு வகுப்பிற்கு, ஒரு ஆசிரியர் தான் இருப்பாங்க. எல்லாப் பாடத்தையும், வகுப்பு நேரத்திலேயே எடுத்து முடிக்க முடியாது. அதனால், மாணவர்களை மாலை வீட்டிற்கு வர சொல்லி, தனியாகவும் பாடம் சொல்லிக் கொடுத்தேன். பள்ளிக்கு லீவு எடுக்காமல் வரும் மாணவர்களுக்கும், ஒழுக்கமாக இருக்கும் மாணவர்களுக்கும், என் சொந்த செலவிலேயே, பரிசுகள் வாங்கிக் கொடுப்பேன். இதனால், போட்டு போட்டு பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். திடீரென ஒரு நாள், ஒரு டி.எஸ்.பி., என்னிடம் வந்து, "நான் நடராஜன்... உங்களிடம் படித்து தான் நான் இந்நிலைக்கு உயர்ந்துள்ளேன்; என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க...' என்றபோது, என் சவாலும், ஜெயித்ததைப் போல் உணர்ந்தேன். பள்ளிக்கூடத்திற்கே வர மறுத்த எத்தனையோ மாணவர்கள் இன்று, ராணுவம், போலீஸ், வங்கி அதிகாரி என்று பெரிய ஆளாகிவிட்டனர். இது போதும் எனக்கு; நிறைவான வாழ்க்கை வாழ்ந்தது போல் உள்ளது.

No comments:

Post a Comment