Wednesday, September 23, 2020

நுட்பவியல் கலைச் சொற்கள் - Software name in tamil

 மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp      -      புலனம்

2. youtube          -      வலையொளி

3. Instagram      -      படவரி

4. WeChat          -        அளாவி

5.Messanger    -        பற்றியம்

6.Twtter              -        கீச்சகம்

7.Telegram        -        தொலைவரி

8. skype            -          காயலை

9.Bluetooth      -          ஊடலை

10.WiFi            -          அருகலை 

11.Hotspot        -          பகிரலை

12.Broadband  -        ஆலலை

13.Online          -        இயங்கலை

14.Offline            -        முடக்கலை

15.Thumbdrive  -        விரலி

16.Hard disk      -        வன்தட்டு

17.GPS                -        தடங்காட்டி

18.cctv                -        மறைகாணி

19.OCR              -        எழுத்துணரி

20 LED              -        ஒளிர்விமுனை 

21.3D                  -        முத்திரட்சி

22.2D                -        இருதிரட்சி

23.Projector      -        ஒளிவீச்சி

24.printer          -        அச்சுப்பொறி

25.scanner        -        வருடி

26.smart phone  -      திறன்பேசி

27.Simcard          -      செறிவட்டை

28.Charger          -        மின்னூக்கி

29.Digital            -        எண்மின்

30.Cyber            -          மின்வெளி

31.Router          -        திசைவி

32.Selfie            -        தம் படம் - சுயஉரு - சுயப்பு

33 Thumbnail              சிறுபடம்

34.Meme          -        போன்மி

35.Print Screen -          திரைப் பிடிப்பு

36.Inkjet            -          மைவீச்சு

37.Laser            -          சீரொளி


- தமிழுணர்வு கொண்டோர் இதை  நண்பர்களுக்குப்

பகிரலாம் -

Tuesday, September 22, 2020

மன முதிர்ச்சி என்றால் என்ன? What is Maturity of Mind ?

 மன முதிர்ச்சி என்றால் என்ன?

 What is Maturity of Mind ? 


1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு 

    நம்மை திருத்திக்கொள்வது.

1. Correcting ourselves without trying to correct others.


2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)

    ஏற்றுக்கொள்வது.

2. Accepting others with their short comings.


3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் 

கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

3. Understanding the opinions of others from their perspectives.


4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

4. Learning to leave what are to be avoided.


5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

5. Leaving the expectations from others.


6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

6. Doing whatever we do with peace of mind.


7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் 

    நிரூபிப்பதை விடுவது.

7. Avoiding to prove our intelligence on others.


8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் 

என்ற நிலையை விடுதல்.

8. Avoiding the status that others should accept our actions.


9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

9. Avoiding the comparisons of ourselves with others.


10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

10. Trying to keep our peace in our mind 

      without worrying for anything.


11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய 

    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

11. Understanding the difference between the basic needs 

      and what we want.


12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல

     என்ற நிலையை அடைதல்.

12. Reaching the status that happiness is not connected  with material things.


இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*

Our life will be simple if only we practice 7 or 8 of the above 12.


Live your Life & Love your Life.

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்.

 ♻ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு

நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....


💎நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...

நாளும் அது புரிவதில்லை 


🤞பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட

பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.


👍🏽இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...

ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!


💧நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .


👎நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....


🤝நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,

இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....


💓 வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,

மனஅமைதியையும் தேடுங்கள் ...

மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,

ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை


💚இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....

அதற்கும் ... "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .


🌹அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...

இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?


⚡சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...

15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.


💢கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!


🌏வேலை இல்லாதவனின் பகலும்,

நோயாளியின் இரவும் மிக நீளமானவை.


👉வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...


🖤மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...

அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...


👇எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....


🌈இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,

வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...

இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...


₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று

எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.


₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்

குற்றங்களுக்கு காரணம்!


₹ சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து

 உனைசீரழிக்கும் துரோகியைவிட ...

 முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்

எதிரி_மேலானவன் !.....


₹ அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து

பிரிந்து விட இயலவில்லை....

பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்

ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது


₹ உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்

கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்

ஒருபோதும் இழந்து விடாதே..


₹ அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,

கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது

கிடைப்பதில்லை...


₹பேரின்பம் வேண்டாம்...

சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........


₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை

விட நம் காதுகளை மூடிக்கொள்வது

மிகச் சிறந்தது......


£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..


£ புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!

 மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!

 எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!


£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.

உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....


£ வாழ்வோடு போராடிச் சாவதிலும்

சாவோடு போராடி வாழ்வதிலுமே...

வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!! 


அருமையான வாக்கியங்களாக........ எனக்கு வந்ததை.......

உங்களுடன் பகிர்கிறேன்........

படித்து.....பயன்பெற

முயற்சிப்போம்.

வரும்முன் காப்போம் - முழுமையாக விழித்துக் கொள்வோம்...

இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...

🔴 
சிகப்பில் இருந்தாலும் சரி...

🟠 
ஆரஞ்சில் இருந்தாலும் சரி...

🟢 
பச்சையில் இருந்தாலும் சரி...

🏢
கடைகள் திறந்தாலும் சரி...

திறக்கப்படாவிட்டாலும் சரி...

🔔
ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி...

 🔕
தளராவிட்டாலும் சரி...

🚷
ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி...

🚸
தடுக்காவிட்டாலும் சரி...

📢அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி...

 📣
போடாவிட்டாலும் சரி...

🔈
மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி...

 🔇
பேசாவிட்டாலும் சரி...

👨‍👩‍👦‍👦
*ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்...* 

உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது...

🌐
இது ஒரு #Pandemic - உலகளாவிய கிருமி பரவல்...

நீண்ட காலம் இருக்கும். பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்...

💅
அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு விசயமே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்...

👨‍👩‍👧‍👧👨‍👨‍👧‍👦🧕👲👨‍🎤🧟‍♂
கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்...

🚶‍♂
லிஃப்டில் கூட்டம் இருந்தால்...

படிக்கட்டு வழியாக ஏறவும் இறங்கவும்...

📍
லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்...

😷
பொது வெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்...

🤦‍♂🤦‍♀
அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்...

வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்...

👀
கண்ணை கசக்குவது...

👃மூக்கு நோண்டுவது...

🥱
வாயில் சொரிவது.. 

🤭
முகத்தில் கை வைப்பது... 

போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்.

♦️
எங்கும் எச்சில் துப்பாதீர்கள்...

♦️
கைக் குட்டை சிறிய துண்டு வைத்து தும்முங்கள் இருமுங்கள்...

♦️
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்...

♦️
கும்பல் கூடுவதை முற்றிலும் தவிருங்கள்...

♦️
முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்...

♦️
அலுவலகம்...
வீடு...
கடை... 

அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்...

♦️
ஆட்டோ...
ஷேர் ஆட்டோ...
டாக்சி...
பஸ்...
ட்ரெயின்... 

பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்...

♦️
தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்...

♦️
திருமணம்...
பர்த்டே பார்ட்டி... 

ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்...

♦️
வாய்ப்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய் வாழ்த்து அன்பளிப்பு அனுப்பலாம்...

♦️
பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும்...

 ♦️
அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்...

♦️
முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்...

♦️
வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்...

♦️
கிளினிக் மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லாமல் செல்ல வேண்டாம்....

♦️
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்....

♦️
வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி...
நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி...

♦️ 
அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்...!!! 

*வரும்முன் காப்போம்*

முழுமையாக விழித்துக் கொள்வோம்...

இந்தத் தகவலை நல்லெண்ணம் கொண்டவர்கள் படித்தால் 4 பேருக்கு அனுப்புங்கள்...

Wednesday, April 6, 2016

ஒரு பள்ளிக்கூடம்

ஒரு பள்ளிக்கூடம்.

ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார்.

மாணவர்கள் எழுந்து நிற்கிறார் கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.

3 & 6 & 12

இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார்.

‘‘மாணவர்களே... இதன் தீர்வு...’’

அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான்.

‘‘ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!’’

‘‘இல்லை!’’ என்கிறார் ஆசிரியர்.

அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள்.

‘‘ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!’’

‘‘இல்லை... இல்லை!’’
மாணவர்கள் விழிக்கிறார்கள்.

இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.

‘‘மாணவர்களே... நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.’’

தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.

‘‘இப்போது மறுபடியும் முயல்வோம்...’’ என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்:

22 58 33 55.

உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.

‘‘சார், இதன் தீர்வு என்ன?’’

ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘‘இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!’’

மாணவர்கள் அமைதியானார்கள்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.
‘‘மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை:

கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

இரண்டாவது அறிவுரை:

ரிலாக்ஸாக இருங்கள்.

நண்பர்களே!

இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும்தான்.

இன்றைய மனிதன் கற்பனையான பிரச்னை களிலேயே அதிகம் கலங்கிப் போகிறான். அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.

விளைவு?

ஆலயங்களை நாடிச் சென்று ஆண்டவனிடம் முறையிடுகிறான்.

பக்தர்களே!

உங்களுக்கு பகவான் சொல்ல விரும்புகிற அறிவுரையும் இதுதான்:

1. கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

2. ரிலாக்ஸாக இருங்கள்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதை.

Monday, April 4, 2016

புகழ்பெற்ற கல்லறை வாசகங்க

புகழ்பெற்ற கல்லறை வாசகங்களாக யாரோ எழுதியதை இன்று படித்தேன் ... மிகவும் பொருத்தமாகவே இருந்தது ..

புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை ..." சப்தமிட்டு நடக்காதீர்கள், இங்கே தான் என் அருமைத் தாயார் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள் ",

உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம் ," உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது . நல்ல வேளை இவள் பிணமானாள் , இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும் ".

மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள் , " இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது " ..

ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம் , "இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான் " ....

அரசியல்வாதியின் கல்லறையில் , " தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள் , இவன் எழுந்து விடக்கூடாது ".

ஒரு விலை மகளின் கல்லறை வாசகம் , " இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள் ,தொந்தரவு செய்யாதீர்கள் , பாவம் இனி வர முடியாது இவளால் "....

இவ்வளவு தானா வாழ்க்கை ??? ஆம் அதிலென்ன சந்தேகம் ?? ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல் .... உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான் .

அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள் .....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் , ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை .....

நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம் ?? காலம் நம்மை எத்தனை நாள் விட்டு வைக்கும் ??

நமது பதவியா ??

நாம் சேர்த்த சொத்து சுகங்களா ?

நமது படிப்பா ??

நமது வீடா ??

நம் முன்னோர்களின் ஆஸ்தியா ??

நமது அறிவா ??

நமது பிள்ளைகளா ???

எது நம்மைக் காப்பாற்றப் போகிறது ???

ரத்தம் சுருங்கி , நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை ...

பசித்தவனுக்கு உணவு கொடுத்து , உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து , எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள் .

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும் .

ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம் ....நல்ல செயல்களை , எண்ணங்களை விதைப்போம் ....

அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக ....

பிறரை வாழ வைத்து வாழ்வோம்.

Saturday, April 2, 2016

கனவன் மனைவி

இது ஒரு கனவன் மனைவிக்கு இடையில் நடந்த சோகம் நிறைந்த கதை !!!

ஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்.வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்வேகமாக நடக்கத் தொடங்கினர்.திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார்.கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான்மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.மழைச்சாரலோடு கும்மிருட்டும்சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு, மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ளபாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தால்.இருட்டில் எதுவும் தெரியவில்லை.மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில்

நின்றுகொண்டிருப்பதுதெரிந்தது.தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள்., கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.அவளுக்கு அழுகையாய் வந்தது...

இப்படிபயந்து அழைக்கிறேன்.என்ன மனிதர் இவர்?? திரும்பி கூட பார்க்கவில்லையே... என, மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தைகடந்தாள்.பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தைகடந்துவிட்டாள்.கணவரை கோபத்தோடுபார்க்கிறாள்.அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தகயிற்றுப்பாலத்தை தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்....

அதை பார்த்த அவள், கண்களில் கண்ணீர் வடிய கணவரை கட்டியணைத்தாள்!!!சில சமயம் கணவர் குடும்பத்திற்குஎதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாகதோன்றும்.

ஆனால்,.உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இருப்பார்.தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போலஇருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்...

.வாழ்க்கை ஒரு விசித்திரமானவிந்தை.தூரத்தில் இருப்பது தெளிவாகதெரிந்தாலும், அருகில்வரும்போது மட்டுமேபொருள் புரிகிறது!!!உண்மையான அன்போடும்,நிலையான நம்பிக்கையோடும்வாழ்க்கையை நடத்துங்கள்