Tuesday, January 31, 2012

சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் மட்டுமல்ல, கேன்சரும் வருமாம்!


Sareeதினமும் சேலை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படும் என்று இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் செயிதி வெளியிட்டுள்ளது.

பெண்கள் என்னதான் மார்டன் உடைகள் அணிந்தாலும் சேலை கட்டும்போது அவர்களின் அழகே தனி. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடல் கேட்டதுண்டு. ஆனால் தற்போது சேலை கட்டும் பெண்ணுக்கு கேன்சர் வருதாம் என்பது தான் அதிர்ச்சியூட்டும் தகவல்.

இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட இதழில் தினமும் சேலை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த புற்றுநோய்க்கு பெயரே சேலை புற்றுநோயாம்.

இது குறித்து அந்த பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த 2 ஆண்டுகளில் இடை அல்லது சேலை புற்றுநோய் பாதித்த 3 பெண்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். சேலை கட்டும் பெண்கள் உள்பாவாடையை இருகக் கட்டும்போது இடுப்பில் எரிச்சல் ஏற்படுகிறது. இந்த தொடர் எரிச்சலால் அந்த இடத்தில் உள்ள தோலின் நிறம் மாறுகிறது. ஆனால் இந்த விவகாரம் பெரிதாவது வரை பெரும்பாலான பெண்கள் கண்டுகொள்வதில்லை.

அதே சமயம் இந்த புற்றுநோய் கால்சட்டை மற்றும் பெல்ட் அணிவதால் வராது. அதற்கு காரணம் கால்சட்டை பட்டன் போடும் இடமும் சரி, பெல்டும் சரி அகலமாக இருப்பதால் அழுத்தம் பரவலான இடத்தில் ஏற்படுகிறது. ஆனால் உள்பாவாடை நாடா சிறியதாக இருப்பதாக அழுத்தமும் குறுகிய இடத்தில் ஏற்படுகிறது. தினமும் ஒரே இடத்தில் இறுகலாக உள்பாவாடை கட்டுவதால் அந்த இடத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.

இந்த குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் இந்த புற்றுநோய் இடுப்புப் பகுதியில் இருக்கும் மெல்லிய நிண நீர்க்குழாய்களுக்கு பரவினால் கட்டியை அகற்ற வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

எனவே சேலை புற்றுநோயைத் தவிர்க்க உள்பாவாடையை சற்று லூஸாக கட்டலாம், பட்டையான நாடாவைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெண்களின் 'பலமே' சேலைதான். அதிலும் கேன்சர் வேலையாக் காட்டுகிறதா... ரொம்பக் கஷ்டம்தான்!

No comments:

Post a Comment