Monday, October 21, 2013

இன்ஸ்டன் சப்பாத்தி – உடனடி சப்பாத்தி உற்பத்தி தொழில்



நல்ல லாபம் தரும் வியாபரத்தை துவங்க இருப்பவர்கள் அனைவருக்கும் தொழிற்களத்தின் வியாபார வாய்ப்பு ஆலோசனைகள் பலனளிக்கும் என்றே நம்புகிறோம்.
     அந்த வகையில் பொருளாதார அடிப்படையில் நல்ல லாபம் தரக்கூடிய தொழில்களில் முதன்மையானவை உணவு, உடைகள் சார்ந்த தொழில்களே!! கடின உழைப்புடன் சாமார்த்தியமான சந்தை வாய்ப்பையும் கவனத்தில் கொண்டு உங்கள் தொழிலை கவனித்து வந்தால் நிச்சயமாக அதிக லாபத்தை எந்த ஒரு தொழிலானாலும் உங்களுக்கு தரும்.
இன்ஸ்டன் சப்பாத்தி – உடனடி சப்பாத்தி உற்பத்தி தொழில்

Sunday, February 17, 2013

உப்பளத் தொழிலாளர்

உப்பளத் தொழிலாளர் களின் கஷ்டத்தை நீக்க, குறைந்த விலையில் நீர் இறைக்கும், "சோலார் மோட்டார் பம்ப்' தயாரித்த, ஜெயராஜ்: வேதாரண்யத்தில், கடல் நீரைப் பயன்படுத்தி, உப்பு தயாரிப்பதே, முக்கிய தொழில். மின் வெட்டாலும், எரிபொருளுக்கான விலை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து செல்வதாலும், பெரிய உப்பள உரிமையாளர்கள் மட்டுமே, மின்சாரத்தில் இயங்கும், "மோட்டார் பம்ப் செட்' மற்றும் டீசலில் இயங்கும், "பம்ப் செட்' மூலம், கடல் நீரை இறைப்பர்.வசதியற்றவர்கள்,

Thursday, February 7, 2013

குறை தீர்க்கும்யோகா!



ஒழுங்கற்ற மாதவிடாய் பருவத்தை,"யோகா' மூலம் தீர்க்கும், மேனகா தேசிகாச்சார்: ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட, மேற்கத்திய உணவு கலாசாரமே காரணம். உயரத்திற்கு ஏற்ற எடையை விட கூடுதலாக இருப்பது,

Wednesday, February 6, 2013

உறுதியான பிளாஸ்டிக் சாலைகள்

உறுதியான பிளாஸ்டிக் சாலைகள் அமைப்பதற்கான, தொழில்நுட்பநிபுணர் டாக்டர் ஆர்.வாசுதேவன்:

 மதுரை தியாகராஜர் கல்லூரியில், வேதியல் துறை தலைவராக பணியாற்று கிறேன். ஒரு சாதாரண தார் சாலை, மூன்று ஆண்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்கும். ஆனால், பிளாஸ்டிக் சாலைகள், 10ஆண்டுகள் தாக்கு பிடிக்கும்.

Sunday, February 3, 2013

பட்டத்து யானை


அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும்
சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன்,
தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த
குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத தைப்் போற்றிப் புகழ்ந்தனர். கதை முடிஞ்சுச்சு

Saturday, February 2, 2013

ஜில்லுன்னு ஒரு ஐஸ் கிரீம்!


ஐஸ் கிரீமின் நன்மைகளை விவரிக்கும், விஷ்ணுபிரியா ஸ்ரீகாந்த்: இன்றைய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் அனைத்தும், ஐஸ் கிரீமோடு நிறைவு பெறுகின்றன. நாளுக்கு நாள், ஐஸ் கிரீம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை உயர்வதால், அதை பற்றிய சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகள் ஐஸ் கிரீம் சாப்பிட்டால், பல் சொத்தையாகும், சளி பிடிக்கும்,

Friday, February 1, 2013

இரும்புக் கரம் கொண்ட பெண்!



கணவனுக்கு உதவியாக, இரும்பு பட்டறை தொழில் செய்யும் விஜயலட்சுமி: சொந்த ஊர், நெல்லையின் கல்லிடைக்குறிச்சி. 28 ஆண்டுகளுக்கு முன், பேச்சிமுத்து என்பவருடன் திருமணமாகி, தூத்துக்குடியில், குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கணவர் சொந்தமாக லேத் பட்டறை வைத்து, கிரில் வேலை செய்து வருகிறார். பட்டறையில் இரண்டு,

Thursday, January 31, 2013

பசுமைப் புரட்சி செய்யலாம்!


புதிய நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்திய, ஓய்வு பெற்ற பொறியாளர் பெரியண்ணன்: நான், சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி கிராமத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற பொறியாளர்.

Wednesday, January 30, 2013

என் முயற்சியை பரீட்சை செய்தேன்



ஒருவரே நடித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கிய, "ஒன்' ஆங்கில படத்தின், "ஒன் மேன்' ஹீரோ ராஜ்குமார்: சங்ககிரியின் நெடும்பாறைக்காடு கிராமத்தில், விவசாயக் குடும்பத்தை சார்ந்தவன். ஓய்வு நேரங்களில் தாத்தா தெருக்கூத்தும், அப்பா மேடை நாடகமும் நடத்தி வந்தனர். கலைப் பாரம்பரியம் விட்டுப் போகாமல், ஓய்வு நேரங்களில், சினிமா எடுக்க முயற்சித்தேன். விவசாயத்தில் வரும் பணத்தில், ஒரு முழு படச் செலவை சரிக்கட்ட முடியாது. எனவே, தொழில்முறை கலைஞர்களை தவிர்த்து, சொந்த ஊரில் வசிப்பவர்களையே நடிக்க வைத்து, "வெங்காயம்' என்ற திரைப்படம் எடுத்தேன். பேர் சொல்லும் படமாக இருந்தாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. 

என்னை மட்டுமே வைத்து, "ஒன்" என்ற ஆங்கில படமெடுக்க, முக்கிய காரணம் பணம். இருந்தாலும், என் அதிகபட்ச தனிமனித முயற்சியை, பரீட்சித்துப் பார்த்து விட ஆசை. சினிமா என்பது இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு, அலுவலக பணி, லைட் மேன் ஒர்க் என, அனைவரது கூட்டு முயற்சியால் ஆனது. என்னை மட்டுமே வைத்து, அனைத்து சினிமா வேலைகளிலும், அதிகபட்ச தனிமனித முயற்சியை காட்டினேன். ஒளிப்பதிவு முதல் அலுவலக பணி வரை, அனைத்தையும் செய்தேன். ஒரே ஆள் இத்தனை சுமைகளை தாங்கி, ஏன் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. 

படத்தில் வரும் பெண்கள் உட்பட, அனைத்து கதாபாத்திரங்களும் நானே நடித்தவை. வணிக ரீதியிலான, அத்தனை, "கலர்புல்' அம்சங்களும் உள்ளன. குறிப்பாக, 500 பேர் திரையரங்கில் படம் பார்க்கும் காட்சியில், 500 பேராக நானே நடித்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரத்திற்கும், மற்றொரு பாத்திரத்திற்கும், லேசான முகச் சாயல் இருக்குமே தவிர, வேறெந்த ஒற்றுமையும் இருக்காது. ஜாக்கிசான், "சைனீஸ் ஸோடியாக்' படத்தில், 15 துறைகளில் ஈடுபட்டார், என்பதே உலக சாதனை. ஆனால், நான் மட்டுமே அனைத்து துறைகளுக்கான வேலை செய்து, எப்படி, "ஒன்' என்ற ஆங்கில படத்தை, தயாரித்து எடுத்தேன் என்பதையும், கேமராவில் பதிவு செய்திருக்கிறேன்.

Tuesday, January 29, 2013

ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்கிறீர்களா?



மன நல மருத்துவர் பாரதி விஸ்வேஸ்வரன்: ஓ.சி.டி., எனப்பதும், "அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்' என்ற நோய் குறித்து, யாருக்கும் தெரிவதில்லை. அர்த்தமில்லாத சிந்தனைகள், மீண்டும் மீண்டும் தோன்றுவது தான் இதற்கு காரணம். இதில், நான்கு வகை உண்டு. அசுத்தம், அழுக்கு, அருவருப்பு போன்ற எண்ணங்கள் தொந்தரவு செய்தால், அளவுக்கதிகமாக, சுத்தத்தை எதிர்பார்ப்பர். அடிக்கடி குளிப்பது, பொருட்களை பலமுறை கழுவி வைப்பது, பல முறை கை கழுவுவது போன்றவற்றில், அடிக்கடி ஈடுபடுவர். இரண்டாவது, சந்தேகத்தால் வரக் கூடிய குழப்பம்.

Monday, January 28, 2013

தெளிவுக் கதை

ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில்
இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப்
போவது?

இந்த நேரத்தில்
ஒரு காளை மாடு அங்கே வந்தது.

பிரசவம்


மருத்துவமனையில் பிரசவத்திற்கு மனைவி வான்மதியை
சேர்த்துவிட்டு வராண்டாவில் உலாத்தினான் மகேஷ்.
லேபர் வார்டிலிருந்து மனைவி வலியால் கத்துவது சன்னமாக
கேட்டது மகேஷுக்கு. பதை பதைப்புடன் காத்திருந்தான்.